வழக்கநிலைத் தேர்வுகளில் வளமான முன்னேற்றம்

யாஸ்மின் பேகம்

பதினொரு வயதில் புகைப்படம் எடுப்பதில் ரஞ்சினிக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தாயார், ரஞ்சினி புகைப்படத் துறையில் மிளிர ஊக்குவித்தார். இப்போது தாயார் தம்முடன் இல்லாவிட்டாலும் அவரது விருப் பத்தை நிறைவேற்ற முடிந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார் வழக்க நிலைத் தேர்வு முடிவுகளை நேற்று முன் தினம் பெற்றுக்கொண்ட ரஞ்சினி சுப்பிரமணியம், 17. தாம் எதிர் பார்த்ததைவிட தேர்வு முடிவுகள் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். மார்பகப் புற்றுநோயால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஞ்சினி யின் தாயார் காலமானர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால், இறுதிக் கட்டத்தில் அவரது புற்றுநோய் இருந்ததால், அவர் படுத்த படுக்கையானார். படிப்பில் கவனம் செலுத்துவ துடன், தாயாரையும் கவனித் துக்கொண்டார் ரஞ்சினி.

ரஞ்சினியோடு சேர்ந்து அவரது இரண்டு சகோதரிகளும் அவர் களது தாயாருக்கு உணவு, மருந்து கொடுப்பது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வது போன்றவற்றைப் பகிர்ந்துகொண் டனர். யாராவது ஒருவர் ரஞ்சினியின் தாயாருடன் எந்நேரமும் இருக்க வேண்டிய அவசியத்தினால் பள்ளி முடிந்தவுடன், வீட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ரஞ்சினிக்கு இருந்தது. கிடைக்கக்கூடிய குறுகிய கால அளவுக்குள் பள்ளிப் பாடங்களைச் செய்து முடிக்க சிரமப்பட்டார் ரஞ்சினி. இருப்பினும், படிப்பின் மீதான அவரது கவனம் சற்றும் குறையவில்லை. இரண்டு ஆண்டுகளாக ரஞ்சினியின் வகுப்பு ஆசிரியரான, திருமதி நொர்லியா, 36, "ரஞ்சினி மிகுந்த மன உறுதி கொண்டவர். வீட்டில் இத்தனை பொறுப்புகள் இருந்தாலும் பள்ளி நேரங்களில் மிகவும் உறுதியான மனத்துடனே காணப்பட்டார். சக மாணவர் களுக்கு உதவியதுடன் அவர் களுக்கு ஊக்குவிப்பும் நல்கினார் ரஞ்சினி," என்றார்.

மூத்த சகோதரி சிவப்பிரியா சுப்பிரமணியத்துடன் ரஞ்சினி சுப்பிரமணியம் (இடது). படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!