திறன்களை வளர்க்கப் புதிய வசதிகள்

ஐஸ்வர்யா சுப்பிரமணியன்

மருந்தியல் அறிவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்குப் புதிய வசதிகளைத் திறந்துவைத்து, பதினைந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியுள்ளது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி. என்டியுசி சுகாதாரக் கூட்டுறவு நிறுவனத்துடன் இணைந்து 'ஆர்பி- யூனிட்டி' எனும் கற்பித்தலுக்கான சில்லறை விற்பனை மருந்தகம் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி யில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளருமான திரு சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

"புதிய வசதிகள் மாணவர் களுடைய அறிவுப்பரப்பை விரிவு படுத்துவதோடு அவர்களுடைய வேலை பார்க்கும் தகுதியையும் அதிகரிக்கிறது. வேலைத் திறன்களை நாம் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான இன்னொரு முயற்சி தான் இந்த வசதிக்கான ஏற்பாடு,'' என்றார் திரு சான். ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரியும் முதல்வருமான திரு லியோ லி ஃப்யூ, அமைச்சர் சான் ஆகியோர் திறப்பு விழாவின்போது ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மருந்தகத்தில் மற்ற மாணவர்களுடன் அனுஷா தமிழ்மாறன் (இடக்கோடி). படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!