பன்முகத் திறன்களுடன் மிளிரும் நிஷ்தா

அஷ்வினி செல்வராஜ்

வழக்கறிஞர்களாகப் பணிபுரியும் பெற்றோர் அவர்களது ஆசை களையும் கனவுகளையும் தம் மீது திணிக்கவில்லை என்றாலும் பெற்றோரின் பணி சார்ந்த அனுபவங்களைக் கேட்டு வளர்ந்த நிஷ்தா ஆனன், 19, பன்முகத் திறன்களோடு சட்டம், அரசியல், அனைத்துலக விவகாரம் போன்ற துறைகளில் மேற்கல்வியைத் தொடர விழைகிறார். சிங்கப்பூர் கலைப்பள்ளியில் 'இன்டர்நேஷனல் பேக்கலரேட் (ஐபி)' பட்டயக்கல்வி மேற்கொண்ட நிஷ்தா, சென்ற வாரம் வெளியான தேர்வு முடிவுகளில் 45க்கு 37 புள்ளிகளுடன் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். நிஷ்தா பயின்ற மனிதப் புவியியல் பாடம் உலகத்தைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை மாற்றியதோடு, சட்டத்துறையைப் பற்றி பெற்றோர் அவருடன் பகிர்ந்துகொண்ட தகவல்களுக்கும் வலுச்சேர்க்கும் விதத்தில் அமைந்தது.

கல்வியோடு, வேறு பல நட வடிக்கைகளிலும் ஈடுபட்டு முத்திரை பதித்துள்ளார் நிஷ்தா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீணை அரங்கேற்றத்தை முடித்திருக்கும் நிஷ்தா, '2014- 2016க்கான டேவிட் மார்ஷல்' இளம் கலைஞருக்கான உபகாரச் சம்பளத்தையும் பெற்றுள்ளார்.

வீணை, வயோலா இசைக்கருவிகளை வாசிக்கும் திறன்பெற்ற நிஷ்தா. படம்: நிஷ்தா ஆனன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!