தொண்டூழியத்தில் சிறகடித்துப் பறக்கும் இளையர்கள்

ப. பாலசுப்பிரமணியம்

இவ்வாண்டு 21 வயது பூர்த்தி யாகும் கார்த்திகேயன் ஜெயராமும் ஷாகுல் ஹமிட் முகமது ஷரிப்பும் இளம் வயதிலிருந்தே தங்கள் வட்டாரக் குடியிருப்பாளர்களுக் கான திட்டங்களை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக வழி நடத்தியவர்கள். இந்த சமூகப் பங்களிப்பை அங்கீகரித்து மக்கள் கழக இளையர் இயக்கம் இவர்களுக்கு 'சிறந்த புதுமுக இளையர்கள்' விருதை இம்மாதம் ஏழாம் தேதி கொடுத்து கெளரவித்தது. சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த விருது நிகழ்ச்சியில் 16 இளையர் மன்றங்களும் 14 இளையர் திட்டக் குழுக்களோடு 15 இளையர்களும் சமூகத்திற்கு ஆற்றிய முக்கிய பங்கிற்காக அங்கீகரிக்கப்பட்டனர்.

ஊட்ரம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே கார்த்திகேயன், கிம் செங் சமூக மன்ற நடவடிக்கை களில் பள்ளி வழியாகச் சேவை யாற்றத் தொடங்கிவிட்டார். 'ஓ' நிலைத் தேர்வுகளுக்குப் பிறகு முழுமூச்சாக அச்சமூக மன்றத்தின் இளையர் நிர்வாகக் குழுவில் சேர்ந்து சமூகத் திட்டங்களில் மும்முரம் காட்டி வருகிறார். 2015ஆம் ஆண்டில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு 'இன்டக்ஷன் குக்கர்' வழங்கும் திட்டத்தில் கார்த்திகேயன் முக்கிய பங்கு வகித்தார். குடியிருப்பாளர் களுக்கு குக்கரை வழங்கி, அதனை எப்படி பயன்படுத்துவது என சொல்லிக்கொடுத்த இவரது குழு, குடியிருப்பாளர்களிடம் பல சமையல் குறிப்புகளைச் சேகரித்து அதனை ஒரு நூலாகத் தொகுக்கவும் முற்பட்டது. நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் மருந்தியல் அறிவியல் பட்டயக்கல்வி பயின்ற கார்த்திகேயன் தற்போது தேசிய சேவை புரிகிறார்.

கார்த்திகேயனின் சமூக ஈடுபாடு அவரது 17 வயது தம்பி லிங்கேஷையும் அந்த இளையர் நிர்வாகக் குழுவின் பக்கம் ஈர்த்துள்ளது.

கிம் செங் சமூக மன்ற இளையர் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் கார்த்திகேயன் ஜெயராம் (பச்சை நிறச் சட்டையுடன்) சுற்றுப்புறத் திட்டங்களை ஏற்பாடு செய்வதோடு குழுவில் புதிதாகச் சேரும் இளையர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். படம்: மக்கள் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!