சில நூறுகள் செலவிடும் ‘பாப்’ இசைப் பிரியர்கள்

கால் முறிந்த நிலையிலும் தமக்குப் பிடித்த 'த வான்டட்' இசைக்குழு சிங்கப்பூரில் இசைநிகழ்ச்சி படைப் பதை அறிந்து, அவர்களை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற துடன் சிரமத்தைப் பொருட்படுத் தாமல் இசைநிகழ்ச்சிக்கும் சென்றார் ‌ஷிரியா செட்டியார், 18. பள்ளியில் வலைப்பந்து விளை யாட்டு ஒன்றின்போது ‌ஷிரியா செட்டியாரின் இடது காலில் முறிவு ஏற்பட்டது. இருப்பினும், இசை நிகழ்ச்சிகளைப் படைக்க இக் கலைஞர்கள் அடிக்கடி இங்கு வருவதில்லை என்பதால், அவர் கள் நான்காண்டுகளுக்கு முன்பு இங்கே வந்தபோது இசை நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டுகளை வாங்கினார் ‌ஷிரியா.

கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் அரங்கில் இரண்டு மணி நேரத்திற்கு நின்று சமாளிப் பது சிரமம் என்பதால் நிகழ்ச்சிக் குச் செல்லவேண்டாம் என ‌ஷிரியா வின் பெற்றோர் அறிவுறுத்தினர். 'த வான்டட்' இசைக்குழுவை நேரில் காணவேண்டும் என்று உறுதியாக இருந்த ‌ஷிரியா, இறுதியில் நிகழ்ச்சிக்குத் தமது தாயாருடன் சென்றார். "ஊன்றுகோலின் உதவியோடு நடக்கும் நிலையில் அப்போது நான் இருந்ததைக் கண்டு, உட்கார்ந்து நிகழ்ச்சியைக் காண எனக்கு இருக்கை தந்து உதவினர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள்," என்றார் ‌ஷிரியா.

காலில் கட்டுடன் 'த வான்டட்' இசைக் குழுவினரை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற ‌ஷிரியா விரைவில் நலம்பெற வாழ்த்தி அவரது கால் கட்டின் மீது கையொப்பமிட்டார் அந்த இசைக் குழுவைச் சேர்ந்த சிவா கனேஷ்வரன் (இடக்கோடி). அந்தக் குழுவினருடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பையும் பெற்றார் ‌ஷிரியா (வலமிருந்து மூன்றாவது). படம்: ‌ஷிரியா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!