தளராத பயிற்சியால் மெருகேறும் பெண்கள்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று எண்ணி நான்கு ஆண்டுகளுக்கு முன் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று பயிற்சிகளைத் தொடங்கினார் தெ.சூர்யா. ஆனால் அப்போது அவர் பயிற்சியாளரின் உதவியை நாடாமல் இணையத்தில் இருந்த தகவல்களைப் பின்பற்றி பயிற்சி செய்தார். "யூட்டியூப் காணொளிகளின் வழி பெண்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்து இறுதியில் எடையை 72 கிலோவிலிருந்து 55 கிலோவுக்குக் குறைத்துக்கொண்டேன்," என்று கூறிய அவர், தமது இலக்கை அடைந்ததில் பெருமிதம் கொண்டார்.

இருந்தாலும், இணையத்தை நம்பி அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்யக் கூடாது என்றார் அவர். "உடலமைப்பு, அதன் தேவைகள் ஆகியவற்றைத் தெளிவாக அறிந்து கொண்ட பிறகே உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு பயிற்றுவிப்பாளர் உதவக்கூடும்," என்றார் அவர். "பயிற்றுவிப்பாளரின் உதவி தேவை யில்லை என்றாலும் உடலைப் புரிந்து கொள்ளாமல் உடற்பயிற்சிக் கூடத்தில் கடுமையான பயிற்சிகளை முயல்வதால் சில சமயங்களில் காயங்களும் மாற்று விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு," என்று அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!