குறுகிய காலத்தில் பலன் கண்ட நாதன்

ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

பொறியாளராகப் பணி புரியும் திரு நித்தியநாதன் சிகாமணி, 32, உடலைக் கட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளார். புக்கிட் தீமாவில் இருக்கும் 'எனிடைம் ஃபிட்னஸ்' என்கிற உடற்பயிற்சிக் கூடத்தில் திரு நாதன் பயிற்சிகள் செய்து தனது உடலைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்கிறார். "உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும்போது பிடித்த உடையை அணிய முடிகிறது. மற்றவர்களின் பாராட்டைப் பெறு வதுடன், தன்னம்பிக்கையும் வளர் கிறது. உடலும் ஆரோக்கியத்துடன் திகழ்கிறது," என்றார் அவர். இதுவே, அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்குத் துண்டுதலாக இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமைகளில் மார்பு மற்றும் கைகள், புதன்கிழமைகளில் முதுகு மற்றும் கைகள், வெள்ளிக்கிழமைகளில் கால்கள், வாரயிறுதிகளில் இருதயம் என ஒரு வாரத்திற்குச் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளைக் கவனமாகத் திட்டமிட்டு மேற் கொண்டு வருகிறார். உடற்பயிற்சி செய்யும் நாட்களில் சுமார் 45 நிமிடங்களுக்குத் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறார். "தனியாக உடற்பயிற்சி செய் வதைவிட தனது உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் திரு சசியின் உதவியோடு உடற்பயிற்சி செய்யும் போது, மூன்றே மாதங்களில் உடல் தோற்றத்தில் மாற்றங்களைக் காண முடிகிறது," என்று கூறுகிறார் திரு நாதன். உடலை வலிமைப்படுத்துவதுடன் உணவுப் பழக்கவழக்கங்களையும் கண்காணித்து வருகிறார் நாதன். கார்போ ஹைட்ரேட் உணவு வகைகளை முடிந்த அளவிற்கு தவிர்த்துவிடும் அவர், புரதம் அதிகம் உட்கொள்கிறார். வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே தனக்கு பிடித்ததைச் சாப்பிடுகிறார்.

ஆரம்பத்தில் 81 கிலோ எடை இருந்த நித்தியநாதன் சிகாமணி (நீல உடையில்), உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த பிறகு, 75 கிலோ என்ற தமது இலக்கையும் தாண்டி 73.7 கிலோ எடையை அடைந்தார். உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் சசி ஸுரா ரவுஷ் திரு நாதனுக்கு ஆலோசனை வழங்குகிறார். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!