கட்டுடல் பெற கட்டுக்கோப்பு

சுதாஸகி ராமன்

உடல் பருத்துக் காணப்பட்டதால் சிறு வயதில் தன்னம்பிக்கை இழந்து இருந்தார் கிஷண்டிரா தனபாலன், 23. இப்போது மல்யுத்த வீரரின் உடலமைப்புடன் உடல் கட்டழகுப் போட்டிகளில் பங்கேற் கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் அவர். மூன்றாண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் பயின்றபோது, தமது பருத்த உடலமைப்பின் காரணமாக பிடித்தமான உடைகளைக்கூட அணிய முடியாமல் இருந்தார் கிஷண்டிரா. அந்தச் சமயத்தில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு முதன்முதலில் தம் நண்பர் அடிலுடன் சென்ற கிஷண்டிராவின் வாழ்க்கை அதன் பிறகு தலைகீழாக மாறியுள்ளது.

"கூடத்தில் செய்த உடற்பயிற்சிகளால் நாளடைவில் பல மாற்றங்களைக் காண முடிந்தது. உடற்பயிற்சி செய்யச் செய்ய மார்பு, கைகள், ஆகியவற்றில் தசைகள் வலுவாகிப் பெரிதாகின," என்றார் அவர். இத்தகைய மாற்றங்களால் உற்சாகம் அடைந்த கிஷண்டிரா, இப்போது வாரத்தில் ஆறு தடவை வரை உடற்பயிற்சி கூடத்திற்கு செல்கிறார். தற்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயில்கிறார் கிஷண்ட்ரா. உடலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தொடங்கிய போக்கு மாறி உடற்பயிற்சியே வாழ்க்கை என்று அதற்கு அடிமையாகும் அளவிற்கு தூக்கத்தைக்கூடத் துறந்து ஆர்வத்துடன் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்கிறார் அவர்.

உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யும் கடுமையான உடற் பயிற்சிகளுக்கு ஏற்ற உணவுப் பழக்கங்கள் இருக்கவேண்டும் என்பதால் தினமும் வீட்டில் சமைத்த உணவை கிஷண்டிரா உட்கொள்கிறார். வேலைப் பயிற்சி, பள்ளிப் பாடங்கள் ஆகியவற்றுக்கு இடையே அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், நான்கு வேளைகளுக்கான உணவைத் தயாரித்தல் போன்றவற்றைச் செய்தது சவாலாகவே இருந்ததாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!