பிடித்த பாடங்களில் சிறப்புக் கல்வி வாய்ப்புகள்

சிவகுருநாதன் ரவீணா

தொடக்கப்பள்ளி இரண்டாம் நிலையிலேயே பள்ளி விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை வென்றார் ஜீவினா கணேஷ். விளையாட்டின் மீதான ஆர்வம் ஜீவினாவுக்கு அப்போதே தொடங் கியது. பல ஆண்டுகளாக பரதநாட்டி யம், அயிக்கிடோ தற்காப்புக் கலை போன்றவற்றைக் கற்றுவந்த போதும் விளையாட்டின் மீது ஜீவினாவுக்கு இருந்த அதீத ஆர்வமும் திறனும் முன்பதிவு மாணவர் சேர்ப்புத் திட்டத்தின் மூலம் சாதாரணநிலைத் தேர்வு களுக்கு முன்பாகவே ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இவருக்கு ஓர் இடத்தைத் தேடித் தந்தன. கல்வி அமைச்சின் முன்பதிவு மாணவர் சேர்ப்புத் திட்டதின் கீழ், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் சென்ற ஆண்டிலிருந்து திறன் களின் அடிப்படையில் மாணவர் களைச் சேர்த்துக்கொண்டன. இவ்வாறு சேர்க்கப்படும் மாண வர்கள் அவர்களுடைய திறமை, ஆர்வத்தின் அடிப்படையில் பாடங் களைத் தேர்ந்தெடுத்துப் பயில ஊக்கமளிக்கப்படுகின்றனர்.

வலைப்பந்து, காற்பந்து போன்ற விளையாட்டுகளில்தான் தனக்கு திறன், வலிமை உள்ளது என்று உணர்ந்த ஜீவினா கணேஷ், உயர் நிலை நான்காம் வகுப்பிலேயே தயக்கமின்றி முன்பதிவு சேர்க்கைத் திட்டத்துக்கு விண்ணப்பித்தார். படம்: ஹென்கல் ஹென்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!