சிங்கப்பூர் பல இனமக்கள் ஒன்றுகூடி வாழும் நாடாகும். ஆகையால், அனைத்து இனத் தவரையும் மதிக்கக் கற்றுக் கொண்டால்தான் நம்மால் ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியும். இதற்கு நாம் மற்றவர்களுடைய கலாசாரத்தை நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். எங்கள் பள்ளியின் தாய் மொழிகள் துறையும் அழகியல் துறையும் இணைந்து, கலாசாரம் நிறைந்த இடங்களான லிட்டில் இந்தியா ஆர்க்கேட், தேக்கா ஈரச்சந்தை, சைனா டவுன் காம்ப்ளெக்ஸ், கேலாங் செராய் ஆகிய இடங்களுக்கு ஒரு கற்றல் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்தப் பயணத்தில் உயர்நிலை மூன்றில் பயிலும் அனைவரும் ஈடுபட்டோம். சீன, மலாய் கலாசார உணவு வகைகள், தொழில்கள், உடைகள் போன்றவற்றை சைனா டவுன், கேலாங் செராய் போன்ற இடங் களுக்குச் சென்று பலருடன் உரை யாடித் தெரிந்துகொண்டோம்.
ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் உயர்நிலை மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவிகள் கற்றல் பயணத்தில் பங்கேற்றனர். படம்: ஆர்ஜிஎஸ்