தமிழ்மொழி விழாவில் முதல்முறையாக தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் அரங்கேற்றப்பட்டுள்ள நாடகம்

'செங்குழல் சீவிய பத்தினித் தீ' என்ற தலைப்பில் பட்டிமன்றம், நாடகம், இசைக்காணொளிப் போட்டி என்று மூன்று விதமான அங்கங்களோடு அரங்கேறியது 'பார்வை 2017'.

பார்வையாளர்கள் சுற்று ஒன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு விறுவிறுப்பாக நடைபெற்றது இவ்வாண்டின் சிறப்பு. சங்கத் தமிழ்ப் புழக்கத்தையும் தமிழ் இலக்கியங்களையும் பற்றி தொழில்நுட்பத்தின் துணையோடு இளையர்களுக்காக இளையர்களே படைத்து வரும் பார்வை நிகழ்ச் சியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்மொழி மாத நிகழ்ச்சிகளில் ஒன்றாக இம்மாதம் இரண்டாம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் 'பார்வை 2017' அரங் கேறியது. வாழ்க்கையில் வெற்றி பெறச் சிறந்த வழி 'தர்மமே!' என்று இளையர் அணியும் 'சூழ்ச்சியே!' என்று சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தைச் சேர்ந்த அனுபவம் மிக்கவர்களின் அணியும் காரசாரமாக தங்கள் கருத்துகளை முன்வைத்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!