‘புரோ போனோ’ விருது

'ஷரியா' சட்டம் என்னும் இஸ்லாமிய சட்டத்தை ஆராய்ந்து, இஸ்லாமியர்களின் தனித்துவ உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மாணவர்களால் தொடங்கப்பட்ட ஒரு குழு முயற்சிக்கு 'ப்ரோ போனோ' விருது பெற்றுள்ளார் பிரபு தேவராஜ். இந்தக் குழு முயற்சிக்கு சிங்கப்பூர் தேசியப் பல்கலைகழக 'புரோ போனோ' குழு, இஸ்லாமிய சங்கம், ஐஆர்பி என்னும் சட்ட நிறுவனம் ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் நடத்திய 25வது 'புரோ போனோ' விருது நிகழ்ச்சியில் அந்த விருதைப் பெற்றார் திரு பிரபு. ஒரு துறையைச் சார்ந்தவர் கள், வசதி குறைந்த மக்களுக்குச் சேவை செய்யும்போது அதை அங்கீகரிக்கும் விதத்தில் 'புரோ போனோ' விருது வழங்கப்படு கிறது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் சட்டத் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் திரு பிரபு, 'புரோ போனோ' விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

ஷரியா சட்டத்தை ஆராய்ந்து இஸ்லாமியர்களின் தனித்துவ உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஷரியா சட்ட மன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபு தேவராஜ், அவரது குழுவினர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் 'புரோ போனோ' விருது பெற்றனர். படம்: பெரித்தா ஹரியான்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!