நுணுக்கங்கள் நிறைந்த தமிழ் எழுத்து உருவாக்கம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழர் பேரவை 2012ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த உலகத் தமிழ் மாநாட்டின் தலைப்புச் சின்னத்திற்காக நடத்தப்பட்ட வடி வமைப்புப் போட்டியில் முதன் முதலாகப் பங்கேற்ற ஜே.எஸ்.சசி குமார் வெற்றி பெறவில்லை. இருப்பினும், சசிகுமாரின் வடிவமைப்பைப் பார்த்த அவாண்ட் நாடகக் குழுவின் இயக்குநர் செல்வா, தமது நாடகங்களுக்கான தலைப்புகளையும் சுவரொட்டி களையும் வடிவமைத்துத் தரு மாறு கேட்டுக்கொண்டார். தமிழ் எழுத்துருக்களை தொடர்ந்து வடிவமைப்பதற்கு அது அடித்தளமாக அமைந்தது. அப்போதுதான் தமிழ் எழுத்துரு வியல், வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படைகளை சசிகுமார் கற்றுக்கொண்டார்.

தமிழ் எழுத்துருக்களின் வடிவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஜே.எஸ்.சசிகுமார். அவரது படைப்பில் விளைந்த சில எழுத்துருக்கள் (வலது படங்கள்). படம்: திமத்தி