வித்தியாசமான வடிவங்களில் தமிழ் எழுத்துகள் உருவாக்கம்

அஷ்வினி செல்வராஜ்

தொடக்கத்தில் ஃபிரிலான்சர்.காம் என்ற இணையத்தளத்தில் சில நிறுவனங்களின் தேவைக்கு ஏற்றவாறு சின்னங்களையும் தலைப்புகளையும் வடிவமைத்து வந்தார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பட்டதாரியான பிருந்தா மேனன். சமூக ஊடகம் வழியாக இந்தியாவின் கேலிச் சித்திரக் கலைஞர் ஒருவரின் படைப்புகளைப் பார்த்த பிருந்தா, நிறுவனங்களுக்கு வடிவமைத்துத் தரும் பாணியைவிட கேலிச்சித்திர வடிவமைப்பு பாணியே தன்னுடைய ஓவியத் திறனுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை உணர்ந்தார்.

தமிழ்மொழி மாதத்தை ஒட்டி, சில கருத்துகளை கேலிச் சித்திரத்துடன் இணைத்து தமிழ் மொழியின் உயிரெழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் வித்தியாசமாக வடிவமைத்து அவற்றைச் சமூக ஊடகங்களில் தினமும் பதிவேற்றம் செய்துவருகிறார் பிருந்தா. "வழக்கமாக நான் காகிதத்தில் வரைந்து அதை அலகிட்டு மின்னிலிக்க முறையில் அவற்றுக்கு வண்ணம் தீட்டுவேன். அதிக நுணுக்கங்கள் இல்லாத படங்களை கணினியிலேயே நேரடியாக நான் வரைந்துவிடுவேன்.

தமிழ்மொழி விழாவுக்கு நான் வரைந்த எழுத்துகள், கருத்துகளில் குழப்பம் இருந்தால், தமிழ் மொழியை நன்றாகத் தெரிந்தவர்களிடம் கேட் டுத் தெளிவுபடுத்திக் கொள் கிறேன்," என்று கூறிய பிருந்தா, இதை தமிழ்மொழி விழாவிற்கான தமது பங்காகக் கருதுகிறார். இந்தப் படைப்புகளைப் பார்த்த தமிழ் ஆசிரியர்கள் சிலர் பாராட்டியதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!