தமிழ்த்துறையில் பெருகிவரும் வேலைவாய்ப்புகள்

பொறியியல் துறையில் பட்டயக் கல்வியை மேற்கொண்டிருந்தும் தமிழ்மொழியின் மீதான ஆர்வத் தால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழி, இலக்கியம் சார்ந்த இளங்கலைப் பட்டக் கல்வியை மேற்கொண்டார் ஆனந்த் குமார், 28 (வலது படம்). சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆனந்த் பகுதிநேரமாக இந்தப் படிப்பை மேற்கொண்டார். “நான் தற்போது செய்யும் பணிக்கு மொழிபெயர்ப்பு அடிப் படையாக உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள ஆவணப் படங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் போது, இருமொழிகளிலுமே திறன்பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது,” என்றார் ஆனந்த்.