சவால்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணம்

ரவீணா சிவகுருநாதன்

தொடக்கப்பள்ளியில் பயின்ற போது ஷாலினியின் பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். தம் வாழ்க்கையில் முக்கிய வழி காட்டியான தந்தையுடன் வாழ்ந்து வந்தார் ஷாலினி அர்ஜுணன். அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே ஷாலினியின் தந்தை மாரடைப்பால் இறந்துபோனார். இவரையும் சேர்த்து மூன்று பிள்ளைகளை வளர்க்க அவரது தாயார் சிரமப்பட்டார். தாயாருக்கு உதவியாக இருப் பதற்காகவும் மேற்படிப்பிற்காக பணம் சேர்ப்பதற்காகவும் சாதா ரண நிலைத் தேர்வுகளின் முடிவு களுக்காகக் காத்திருந்த வேளை யில் ஷாங்ரிலா ஹோட்டலில் பகுதி நேர வேலை செய்துவந்தார் ஷாலினி. அந்தக் காலகட்டத்தில் ஹோட்டல் நிர்வாகம் பற்றிய ஆர்வம் ஷாலினிக்கு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஹோட்டல், பொழுதுபோக்கு வசதிகள் நிர்வாகத் துறையில் சேர்ந்தார். மரினா பே சேண்ட்ஸில் மூன்றாம் ஆண்டில் படிக்கும்போது உள்ளகப் பயிற்சிக்கு வாய்ப்புப் பெற்ற ஷாலினி அர்ஜுணன், இவ்வாண்டு வெற்றிகரமாக பட் டயக் கல்வியை முடித்தார். உள்ளகப் பயிற்சியின்போது குழு வேலை, தலைமைத்துவம் போன்ற பண்புகளை வளர்த்துக் கொண்டதாகக் கூறும் ஷாலினி, பாடம் சார்ந்த சொகுசு கப்பல் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அனுபவங்களும் கிடைத்ததாகச் சொன்னார். "என் தந்தை இருந்தவரை, அவர் என் வாழ்க்கைப் பாதையை தெளிவாக அமைத்துத் தந்தார். உயர்நிலைப் பள்ளிக்கு பிறகு, தொடக்கக் கல்லூரி, பல்கலைக் கழகம் என பல கனவுகளை அவர் எனக்காகக் கொண்டிருந்தார்," என்று கூறிய ஷாலினி, தந்தையின் மறைவுக்குப் பிறகு சரியான வழிகாட்டி இல்லையே என்று தவித்ததாகச் சொன்னார்.

மிகவும் சவால் நிறைந்த பயணமாக இருந்தபோதும் மன தைரியத்தைக் கைவிடாமல் வாழ்க்கையில் முன்னோக்கிச் சென்று சாதனை படைத்துள்ளார் ஷாலினி. படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!