சுடச் சுடச் செய்திகள்

இளையரின் கைவண்ணத்தில் உடைகளில் புத்தாக்கம்

மாதங்கி இளங்கோவன்

தமிழ் இலக்கியம், வரலாறு, அரசியல் ஆகியவற்றின் பின்னணியே சிந்து, ஷ்ருதி சகோதரிகள் விரும்பும், விற்கும் சேலைகளுக்கான கரு. தங்களது தாயார் அணிந்த விதவிதமான சேலைகளைப் பார்த்து சேலையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக சகோதரிகள் குறிப்பிட்டனர். தங்களது பாட்டி வெள்ளி சரிகைகள் கொண்ட சேலையை தாமே வடிவமைத்து அவரது திருமணத்துக்கு உடுத்திய சுவையான சம்பவத்தையும் பகிர்ந்து, பல தலைமுறைகளாக சேலையுடனான தங்கள் தொடர்பு பற்றிக் குறிப்பிட்டனர் இவர்கள்.

‘பொட்டுக்கார மாமி’ எனும் பெயரில் ஆடை, அலங்கார நிறுவனம் ஒன்றை நடத்திவரும் இவர்களுக்கு பாரம்பரிய முறையில் சேலைகளை விரும்பும் வாடிக்கை யாளர்களே அதிகம். இந்நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு ஆடை அலங்காரத்தை பற்றி முறையாக கற்றுக்கொள்வ தன் அவசியத்தை உணர்ந்த ஷ்ருதி சூரியா, ‘லேபரட்டரி இன்ஸ்டிடியூட் ஆப் மெர்க்க ண்டைசிங்’ கல்லூரியில் ‘ஃபே ஷன் மார்கெட்டிங்’ துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

‘பொட்டுக்கார மாமி’ நிறுவனத்தின் உரிமையாளார்கள் சிந்து, ஷ்ருதி சகோதரிகள். படம்: திமத்தி டேவிட்