புத்தாக்க முயற்சியில் இளையர்களை ஈடுபடுத்திய அனைத்துலக போட்டி

ரவீணா சிவகுருநாதன்

பதினைந்து வயதிலேயே அறிவியல் துறையின் மீது அதீத ஆர்வம் காட்டி தொலைநோக்கியை மேலும் துல்லியமாக்குவது, ஒருவித நுண்ணுயிர்களைக் கொண்டு சுத்தமான குடிநீர், மின்சாரம் தயாரிப்பது என்பன போன்ற மேம்பட்ட ஆராய்ச்சிகளில் மாணவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது ஆராய்ச்சி களை சிங்கப்பூர் அனைத்துலக அறிவியல் சவாலில் மற்ற நாடு களைச் சார்ந்த மாணவர்களோடு பகிர்ந்துகொண்டனர். அத்துடன், அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் ஒரு வார காலம் நடைபெற்ற கருத்தரங் குகள், அறிவியல் போட்டி ஆகிய வற்றின் மூலம் அறிந்துகொண் டனர்.

‘அறிவாற்றலை இணைத்தல்; புது எல்லைகளைக் கண்டறிதல்’ என்பதே இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் அனைத்துலக அறி வியல் சவாலின் கருப்பொருள். கல்வி அமைச்சுடன் இணைந்து தேசிய தொடக்கக் கல்லூரி ஈராண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது. இவ்வாண்டு ஆறாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில் பல நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்துகொண்டனர். தொலைநோக்கியை மேலும் எவ்வாறு துல்லியமாக்குவது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதைப் பற்றி போட்டியில் பகிர்ந்து கொண்டார் தேசிய தொடக்கக் கல்லூரி மாணவர் அப்துல் வஹாப் இர்ஃபான், 15. வருங்காலத்தில் அறிவியல் ஆய்வில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுகிறார் இர்ஃபான்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.

14 Oct 2019

தேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்

தீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.

14 Oct 2019

தீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்