எழுத்தாற்றலை வளர்த்த இன்னொரு தளம்

சுதாஸகி ராமன்

செவ்வாய்க் கிரகத்தில் நடைபெறும் சம்பவங்களைப் போன்ற வினோத மான கருக்கள் கொண்ட சிறுகதைகள், குறும்படங்கள் போன்றவற்றைத் தமிழ்மொழியில் தயாரிக்க அண்மையில் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பயிலரங்கு மூலம் கற்றுத்தரப் பட்டது. தமிழ்மொழியில் சிறுகதைகள் எழுதுவது, குறும்படங்களுக்கு வசனங்கள் எழுதுவது ஆகிய திறன்களை ‘நானும் ஒரு படைப்பாளி’ பயிலரங்கு, அங்கு நடைபெற்ற போட்டிகள் ஆகிய வற்றின் மூலம் மாணவர்கள் வளர்த்துக்கொண்டனர். தமிழில் எழுத மாணவர்களுக்கு ஆர்வமூட்டிய இந்த நிகழ்ச்சி, அவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் மேடையாகவும் அமைந்தது. கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழிப் பிரிவு இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் எழுத்தாற்றலை வளர்த்த இன்னொரு தளம் பயிலரங்கு விரைவு, வழக்கநிலை ஏட்டுக்கல்வி ஆகிய பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்குச் சிறுகதைகள் எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்தது. இவ்வாண்டு புதிதாக வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவு மாணவர் களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வழக்கநிலை ஏட்டுக்கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர்கள் நிகழ்ச்சியின் ‘வளரும் கலைஞர்கள்’ எனும் பிரிவில் கலந்துகொண்டு தமிழில் திரைக் கதை, வசனங்கள் எழுதுவது பற்றித் தெரிந்துகொண்டனர்.

 

தமிழ்மொழியில் சிறுகதைகள் எழுதுவது, குறும்படங்களுக்கு வசனம் எழுதுவது போன்ற திறன்களை ‘நானும் ஒரு படைப்பாளி’ எனும் பயிலரங்கின் மூலம் மாணவர்கள் வளர்த்துக் கொண்டனர். படம்: கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவு