தொழில்நுட்பத்தின் உதவியுடன் நகைச்சுவை

ரவீணா சிவகுருநாதன்

நகைச்சுவை மீது பேரார்வம் கொண்ட காரணத்தால் சுகாதாரப் பயிற்சியாளர் வேலையை விட்டுவிட்டு ‘ஃபேஸ்புக்’கில் முழு நேர நகைச்சுவையாளராக சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் களம் இறங்கினார் கனகா ராமு, 27. ‘வைன்’ (vine) காணொளி களை பதிவேற்றம் செய்துவந்த சையத் அலியைப் பார்த்து கனகா ராமுவும் அதுபோன்ற காணொளி களைத் தயாரிக்க ஆரம்பித்தார். “சையத் அலி, பாகிஸ்தானிய வாழ்க்கைமுறை, கலாசாரத்தைப் பற்றிப் பல ‘வைன்’ காணொளி களைத் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். நிச்சயமாக மற்ற பாகிஸ்தானிய பார்வையாளர்களால் அவற்றுடன் தொடர்புபடுத்த முடியும். எனவே, நானும் சிங்கப்பூர் இளையர்கள் தொடர்புபடுத்தக்கூடிய வகையில் சிறு காணொளிகளை எனது ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றம் செய்ய நினைத்தேன்,” என்றார் கனகா.

“காணொளிகளின் மூலம் ஒருவரைச் சிரித்து, மகிழ வைக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோள். சிங்கப்பூரில் பலர் மிகவும் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் பெரும்பாலான சமயங்களில் மிகுந்த மன உளைச்சலுடன் இருக்கின்றனர். அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து நகைச்சுவை நிகழ்ச்சி களைப் பார்க்கும்போது அவர் களின் கவலைகள் பறந்து செல்கின்றன,” எனக் கருதுகிறார் கனகா.