திறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்

எஸ்.வெங்கடேஷ்வரன்

'டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல் திறன்களைப் பயன்படுத்தி வரும் திரு கி ஜகதீஸ்வரனுக்கு, 19, சென்ற வாரம் தேசிய இளம் சாதனையாளருக்குத் தங்க விருது கிடைத்தது.
இம்மாதம் 4ஆம் தேதியில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற விழா வில் 182 இளையர்களுக்குத் தேசிய இளம் சாதனையாளர் தங்க விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டனர். சேவை மனப்பான்மையில் சிறந்து விளங் கும் இளையர்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.


"பூமியிலிருந்து கிடைத்த தங்கத்தைவிட, மனிதர்களின் எண்ணங்களின் மூலம் உருவா கிய தங்கம்தான் அதிகம் என்று ஒரு எழுத்தாளர் கூறியுள்ளார்,
"விருதுகளை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகங்கள் ஆக மதிப்புமிக்க பொருள்கள் அல்ல. உங்களது மன உறுதி, திறமை களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தும் விதம், மற்றவர் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றில்தான் அதிக மதிப்பு உள்ளது," என்று அமைச்சர் ஹெங், விழாவில் ஆற்றிய தமது உரையில் குறிப் பிட்டார்.
துல்லியமாக எழுதவும் சரளமாக வாசிக்கவும் கற்றுக் கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தும் கற்றல் குறைபாட்டினால் அவதிப்பட்டாலும், அதனைத் தடையாகக் கருதாமல் நிரலிடலைக் கற்றுக் கொண்டு, அதன் மூலம் சமுதா யத்திற்குப் பல பயனுள்ள முயற்சி களை மேற்கொண்டுள்ளார் ஜகதீஸ்வரன்.

தற்போது நன் யாங் பலதுறைத் தொழிற்கல் லூரியில் கணினி விளையாட்டுக் களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத் துறையில் பயி லும் அவர், முன்னதாக தொழில் நுட்பக் கல்விக் கழகத்தில் 'நைடெக் ' படிப்பில் தலைசிறந்த பாடப் புள்ளிகளோடு (4.0) சான் றிதழ்ப் பெற்ற மாணவராவார்.


நிரலிடுதலைக் கற்றுக்கொள் வதற்கான ஆர்வம் உயர்நிலைப் பள்ளியிலேயே அவருக்குத் தொடங்­கியது. அப்போது ஜக தீஸ்வரன் தமது துணைப் பாட ஆசிரியர் திரு டேனியல் டானுடன் இணைந்து பிலிப்பீன் சைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவருக்குச் செயலி ஒன்றை உருவாக்கினார். 'நைடெக்' படிப்பின்போது அவர் தமது நிரலிடும் ஆற்றலை மேலும் வளர்த்துக்கொண்டார். "நிரலிடலைக் கற்க ஆரம் பத்தில் நான் சிரமப்பட்டேன். ஆயினும், விடாமல் பயிற்சி செய்து இதில் எனது திறனை வளர்த்துக்கொண்டேன்," என்று அவர் சொன்னார்.


தமது இரண்டாவது ஆண்டு படிப்பில், அவர் நான்கு மாண வர்களுடன் இணைந்து டான் டோக் செங் மருத்துவமனையில் 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் உள்ள முதியவர்களுக்காக கைத்தொலைபேசி செயலி ஒன்றை உருவாக்கினார்.
செயலிகளை உருவாக்குவ தோடு நிரலிடுதல் முறைகளையும் அவர் பல்வேறு வயது பிரிவி னரைச் சேர்ந்தவர்களுக்கு இல வசமாகக் கற்றுத்தருகிறார். 'போல்ட் அட் வர்க்' என்ற நிறுவனத்தோடு இணைந்து இதுவரை இரண்டு பயிரலங்கு களை நடத்தியுள்ளார். அங் மோ கியோ சமூக மன்றத்தில் நிரலிடு தல் வகுப்புகளை நடத்தப்போவ தாகவும் அவர் தெரிவித்தார்.


"எதிர்காலத்தில் சமூக சேவைத் துறையில் பயின்று, என் திறன்களைக் கொண்டு சிர மப்படுவோருக்கு உதவி செய்ய பெரிதும் ஆசைப்படு­கிறேன்," என்று ஜகதீஸ்வரன் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!