தேசிய சாதனையை முறியடித்தார் ஜோசப் ஸ்கூலிங்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் நேற்று நடந்த 50 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்தார். 2018 ஃபினா நீச்சல் உலகக் கிண்ண 50 மீட்டர் வண் ணத்துப்பூச்சி போட்டியில் அவர் 22.76 வினாடிகளில் கடந்து இரண்டாவதாகவும் அமெரிக்காவின் மைக்கல் ஆண்ட்ரூ முதலாவதாகவும் வந்தனர். இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இருவரும் சீனாவின் லி ஸுஹௌ, ரஷ்யாவின் விளாடி மியர் மோரோஸோவ் ஆகியோருடன் பொருதவுள்ளனர்.

இன் னொரு சிங்கப்பூரரான டியோங் ட்ஸென் வெய் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இவர் பங்குபெற்றுள்ள சிங்கப்பூர் குழு நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத் தைப் பிடித்தது. முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும் 2வது இடத்தில் ஹாங்காங்கும் உள்ளன.