இணையப் பாதுகாப்பு: சிங்கப்பூர் - இந்தியா பங்காளித்துவம்

அறிவார்ந்த வளாகம் எனும் கருப் பொருளைக் கொண்டு புத்தாக்கத் திட்டங்களை உருவாக்கும் நோக் கில் அண்மையில் நடைபெற்ற 36 மணி நேர ‘ஹெக்கத்தோன்’ எனப்படும் இணைய ஊடுருவல் திறன் போட்டியில் சிங்கப்பூரையும் இந்தியாவையும் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. இம்மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் (என்டியு) நடந்த முதல் இருநாட்டு ‘ஹெக்கத்தோன்’ போட்டியில் வெற்றி பெற்ற அணி களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஓங் யி காங்கும் பரிசுகளை வழங்கினர்.

என்டியுவின் புத்தாக்க தொழில் முனைப்பு நிறுவனமான ‘என்டியுடிவ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமும் தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய மன்றமும் இணைந்து நடத்திய போட்டியில் பங்கேற்ற தலைசிறந்த புத்தாக்க திட்டத்தை வடிவமைத்த சிங்கப்பூர், இந்தியாவின் தலா ஒரு அணிக்கு $10,000 வழங்கப் பட்டது. என்டியுவின் ‘வந்தே அணி’யும் ஐஐடி கரக்பூர் இரண்டாவது அணியும் முதல் பரிசை வென்றன. மாணவர்களிடையே இணக்கத் தையும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதையும் ஊக்கு விக்கும் சமூக கற்றல் தளத்தை மூவர் கொண்ட ‘வந்தே’ அணி உருவாக்கியது. கடந்த ஆண்டு தேர்வுத் தாட்களுக்கு விரிவுரையாளர்கள் அங்கீகரித்த விடைகளையும் அந்தத்தளம் வழங்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்