நவீன தோற்றத்தில் பாரம்பரிய உடைகள்

வைதேகி ஆறுமுகம்

வீன ஆடை வடிவமைப்பு, ஆடை அலங்காரம் போன்றவற்றில் ஆர்வ முள்ளவர் திரு கேசவன் உடை யப்பன். அதேநேரத்தில் தொழில் முனைப்பும் கொண்டிருக்கும் அவர் தமது திறன்களை ஒன்றி ணைத்து நவீன ஆடை அலங்கார இணைய வர்த்தகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பாரம்பரிய ஆடை, ஆபரணம் ஆகியவற்றுடன் முக ஒப்பனை, மருதாணி உள்ளிட்ட சேவைகளை யும் அவரது இணையத் தளம் வழங்குகிறது. பெண்களுக்கா ‘லஷஸ் சடக்ஷன்’, ஆண்களுக் கான ‘டிரென்டிஷன்’ ஆகிய தமது இணைய வர்த்தகத்தை திரு கேசவன் சென்ற ஆண்டு நிறுவினார்.

சிறு வயதிலிருந்தே உடை, பாணி, அலங்காரம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வத்தைக் கொண் டிருந்த 27 வயது திரு கேசவன் தொழிலியல் வடிவமைப்புத் துறையில் பட்டயக் கல்வியைப் பயின்றார். பின்னர், ஆடை வடிவ மைப்புத் துறையிலும் வகுப்பு களுக்குச் சென்றார். பல்வேறு உடலமைப்புகளுக்கும் ஏற்றாற்போல் பாரம்பரிய உடை களைத் தயாரித்து வழங்க வேண் டும் என்னும் நோக்கத்தில் சில பங்காளிகளுடன் இணைந்து இணைய வர்த்தகத்தை அவர் தொடங்கினார். பாரம்பரிய உடைகளை வடிவ மைத்து முடி ஒப்பனையிலும், சேலை கட்டுவதிலும் கேசவன் கவனம் செலுத்துகிறார்.

ஆண்களுக்குப் பல்வேறு பாணிகளில் வேட்டிகளைக் கட்ட திரு சரண் ராஜ், முக ஒப்பனைக்கு மதனா சுபாஸ் பாலன், ஆபர ணங்களுக்கு ‘தேசிபை தேசி’, மருதாணி கலைக்கு ‘ஹேனாபாய்மொன்ஸ்’ என பத்து பங்காளிகள் திரு கேசவனுக்குப் பக்கபலமாக உள்ளனர். ஆடை, ஆபரணங்கள், முக ஒப்பனை ஆகிய அனைத்திலும் முழுமை பெற்று, வாடிக்கையாளர் கள் தங்கள் தோற்றம் குறித்து தன்னம்பிக்கைபெற வேண்டும் என்பதே திரு கேசவனின் விருப்பம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

17 Jun 2019

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்  கல்லூரி படைத்த நாட்டிய விழா

சிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி

17 Jun 2019

சமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு