சமுதாய சேவையாற்றும் வடிவமைப்புத் துறை மாணவர்கள்

எஸ்.வெங்கடேஷ்வரன்

தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களும் பணியாளர்களும் தம் கைத்திறன்களைச் சமுதாயத் திற்காகப் பயன்படுத்த முனைந்து உள்ளனர். தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்கள் பூகிஸ் பகுதியில் அமைந்துள்ள ‘டுவோ கெலரியா’ என்ற வணிக மையத் தில் தொண்டூழிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறை யைச் சேர்ந்த மொத்தம் சுமார் 20 மாணவர்களும் 10 பணியாளர் களும் இம்முயற்சியில் ஈடுபட் டார்கள். இவர்கள் நான்கு வித மான நுண்கலைப் பயிலரங்கு களை இம்மாதம் 7, 8, 14, 15 தேதிகளில் வழிநடத்தினர். குறிப்பேடுகளை உருவாக்குதல், விலங்குத் தோல்களைக் கொண்டு பொருட்கள் உருவாக்கும் கலை, ‘பாப் அப் கார்ட்ஸ்’ எனப்படும் அட்டைகள், ‘கெலிகிராஃபி’ எனப்படும் நவீன கையெழுத்துக் கலை ஆகியவை பற்றிய பயில ரங்குகள் அவை.

அத்துடன், இந்தத் தொண் டூழியர்கள் அவர்களின் கைத் திறனால் உருவாக்கிய பொருட் களை, ‘டுவோ கெலரியா’வில் கடை அமைத்து விற்பனை செய்தார்கள்.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் அமைத்த கடையில் கைவினைப் பொருட்களை விற்கும் அக்கல்லூரி மாணவி சங்கீதா கனகரத்தினம் (இடது). படம்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்