தடைகளைத் தகர்த்து தேர்ச்சி பெற்றவர்கள்

(இடமிருந்து) ஜிசிஇ வழக்க நிலைத் தேர்வில் சிறப்பாகச் செய்துள்ள சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஷாலினி செல்வக்குமார், விஷ்ணு அன்பழகன், ஹஸ்னா ஷானாஸ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

வைதேகி ஆறுமுகம்

சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப் பட்டிருக்கும் அம்மாவைக் கவனித் துக்கொள்வது; தங்கைக்கு வீட் டுப்பாடங்கள் கற்றுக்கொடுப்பது; சமைப்பது போன்ற முக்கிய குடும்ப பொறுப்புகளை ஆறு வயதிலிருந்தே முழு மனதோடு ஏற்று வருகிறார் 16 வயது ஷாலினி செல்வக்குமார்.

தம்முடைய குடும்ப சூழ் நிலையை அறிந்து சோர்வடையாமல் உயர்நிலைக் கல்வியில் கவனம் செலுத்தி வந்த ஷாலினி இவ் வாண்டு நடந்த 'ஜிசிஇ' வழக்க நிலைத் தேர்வில் சிறப்பாகச் செய்து பெற்றோருக்கும் பள்ளிக் கும் பெருமை தேடித் தந்துள்ளார். வழக்கநிலை ஏட்டுக்கல்வி, வழக்கநிலைத் தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள், எழுதி முடித்திருந்த இத்தேர்வுக்கான முடிவுகள் இம் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாகின.

சிராங்கூன் கார்டன் உயர் நிலைப் பள்ளியின் வழக்கநிலைத் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஷாலினி அனைத்துப் பாடங்களி லும் முன்னேற்றம் கண்டு இத்தேர் வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றதற்காக ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார். தொடக்கநிலை வரை யிலும் தாயின் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக அலைந்த ஷாலினி தம்முடைய குடும்பத்தைக் கஷ்டங்களிலிருந்து மீட்க உயர்நிலைக் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.

இளம் பருவத்தில் திசை மாறித் தீய வழிகளுக்குச் செல்லாமல் நன்னடத்தையோடு தம் வாழ்க் கையைச் சீர்படுத்திக்கொண்ட ஷாலினியைப் பற்றி கூறிய தமிழ் ஆசிரியர் திருமதி சரசு பூபதி, "மற்ற மாணவர்களைவிட ஷாலினி சற்று வித்தியாசமாக சிந்திப்பவர். குடும்ப சூழ்நிலை யைக் கருத்தில் கொண்டுள்ள அவர் பள்ளி முடிந்ததும் உடனே வீட்டிற்குச் சென்றுவிடுவார். பேச்சுத் தமிழில் சிறந்து விளங்கும் ஷாலினி எழுத்துத் தமிழில் விடையளிக்கச் சற்று சிரமப்படுவார். இருப்பினும், தமக்கு எழுந்த சந்தேகங்களைத் தன்முனைப்போடு என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். விடாமுயற்சியுடன் படித்து இன் றைக்குச் சாதித்த ஷாலினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்," என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்