கற்றல் குறைபாடு ஒரு பொருட்டல்ல

எஸ்.வெங்கடேஷ்வரன்

இவ்வாண்டு சாதாரண நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் திரு ரஹ்மத்துலா அப்துல் ரஹ்மான், 17. சாதாரண நிலைத் தேர்வில் சிறப்பாகச் செய்திருந்தாலும் இவர் சாதாரண மாணவர் அல்ல. சுமார் 8 வயதிலிருந்தே அவருக்கு ‘டிஸ்லெக்ஸியா’ எனப்படும் கற் றல் குறைபாடு இருந்து வருகிறது. அச்சமயத்தில் சிஷான் தொடக்கநிலைப் பள்ளியில் தொடக்கநிலை இரண்டில் படித் துக்கொண்டிருந்தார். கற்றல் குறைபாட்டால் அவதிப் படுவோருக்கு மொழி சார்ந்த கற்றலும் புரிதலும் சற்று கடினமானதாக இருக்கும். சரளமாக வார்த்தைகளைப் படிப் பதும் எழுதுவதும் பெரும் சவாலாக அமையும். அதையும் மீறிக் கடும் முயற்சி எடுத்துப் படித்தார் திரு ரஹ்மத்துலா. “சிறு வயதில் என்னால் பாடங்களில் சரியாகச் செய்ய முடியவில்லை. என்னைக் கற்றல் குறைபாடுக்குரிய சிறப்புப் பள்ளி யில் சேர்க்க முடியாத நிலையில் மற்ற மாணவர்கள் எழுதும் அதே தேர்வுகளை நானும் எழுதினேன். தேர்ச்சி பெற கடுமையாக உழைத்தேன்.

“உயர்நிலைப் பள்ளியில் படிக் கும்போதுதான் என்னைச் சிறப்புத் தேவையுள்ள மாணவர் என்று கருதி தேர்வுகள் எழுதக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. மற்ற மாணவர்களை ஒப்பிடும்போது எனக்கு கிட்டத்தட்ட 15 நிமிடங் கள் கூடுதலாக வழங்கப்பட்டன. பொறுமையாகப் படித்து பதில் எழுத இது உதவியது,” என்றார் திரு ரஹ்மத்துலா. சென்ற மாதம் 24ஆம் தேதியன்று நிகழ்ந்த சிங்கப்பூர் டிஸ்லெக்ஸியா சங்க மாணவர் களின் பட்டமளிப்பு, சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் பெற்ற 360 மாணவர்களில் திரு ரஹ்மத்துலாவும் ஒருவர்.

சென்ற மாதம் நடந்தேறிய 16ஆவது சிங்கப்பூர் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் பட்டமளிப்பு, சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் திரு ரஹ்மத்துலா பிரதமர் அலுவலக அமைச்சர் இங் சீ மெங்கிடமிருந்து சான்றிதழ் பெறுகிறார். படம்: சிங்கப்பூர் டிஸ்லெக்ஸியா சங்கம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்