சிறந்த உடற்கட்டுக்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறை முக்கியம்

வாழ்க்கையோடு இணைந்த உடற்பயிற்சி ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன்வழி தம் உடலைக் கட்டாக வைத்துக்கொள்கிறார் கஜேஸ்வரன். நாள்தோறும் பல வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இரவு நேரத்தை உடற் பயிற்சிக்காக ஒதுக்குகிறார். "சில சமயங்களில் உடற்பயிற்சிகள் செய்யும்போது பாதியிலேயே நிறுத்திவிடலாம் என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் செய்து முடித்தபின் நாள்தோறும் எனக்குச் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பேன்," என்றார். உடற்பயிற்சியைப் பல பரிமாணங்களில் சுவாரசியமான முறையில் செய்ய விளையாட்டுகள் ஒரு சிறந்த தளம் என்று நம்புகிறார் கஜேஸ்வரன். அவரின் வழக்கமான உடற்பயிற்சித் திட்டம் இவ்வாறு இருக்கும்:

* வாரம் 5 முறை இரண்டு மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தல்

* வாரம் 3 முறை உடற்பயிற்சிக் கூடத்தில் முதுகு, கால், மார்பு தசைகளை வலுப்படுத்த எடை தூக்கும் பயிற்சி செய்தல்

* உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ‘கார்டியோ’ பயிற்சி செய்தல்

* வாரத்தில் இருமுறை மெதுவோட்டம், நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடுதல்

* காற்பந்து, கூடைப்பந்து, ‘ராக் கிளைமிங்’ எனப்படும் கல்சுவர்மேல் ஏறுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுதல்

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  

03 Jun 2019

தமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு