சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிய விளையாட்டு வீராங்கனை

ப. பாலசுப்பிரமணியம்

சோதனைகள் ஒரு விளையாட்டு வீரருக்கு வருவது இயல்பு. ஆனால், சோதனைகளைச் சாத னையாக்குவதில் ஒரு விளையாட் டாளரின் திறமை அடங்கியுள்ளது என்பதை திப்னா லிம் பிரசாத்தின் விளையாட்டுப் பயணம்வழி நாம் கற்றுக்கொள்ளலாம்.

2009ஆம் ஆண்டில் கணுக் கால் காயத்தால் ஓராண்டு காலம் அவர் ஓட்டப் பயிற்சியிலிருந்து விலகி இருக்க வேண்டியிருந்தது. அப்போது 18 வயதாக இருந்த திப்னா விளையாட்டை முழு மையாக மூட்டை கட்டிவிட்டு வேறெதிலாவது கவனம் செலுத்தி இருக்கலாம். இருப்பினும், பொறு மையைக் கடைப்பிடித்து விடா முயற்சியுடன் செயல்பட்டதால் அதற்கான பலன்களும் காலத் துடன் வந்தன. 2011ஆம் ஆண் டில் சிங்கப்பூர் திடல்தடச் சங்க ஏற்பாட்டில் நடந்த 100 மீட்டர் தடையோட்டப் போட்டியில் 14.56 வினாடிகளில் முடித்து யாரும் எதிர்பாராத வகையில் தேசியச் சாதனையை முறியடித்தார் திப்னா.

சிங்கப்பூருக்கு ஒரு தடை ஓட்டப்பந்தய வீராங்கனை உரு வாகும் அறிகுறிகள் அப்போதே தென்பட்டன. நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு, அறிவியல், நிர் வாகத் துறையில் பயின்று கொண்டே ஓட்டப் பயிற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

2012ஆம் ஆண்டில் உலகத் திடல்தட கூட்டமைப்புகள் சங்க (IAAF) உள்ளரங்கு போட்டி, ஒலிம்பிக் போட்டி போன்றவற்றில் பங்குபெற்ற அனுபவம் திப்னாவின் துரித முன்னேற்றத்திற்கு பங் களித்தது. அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டில் மியன்மாரில் நடந்த தென்கிழக்காசிய விளை யாட்டுப் போட்டிகளின் 400 மீட்டர் தடையோட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது அடுத்தடுத்த சாதனைகளின் தொடக்கம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்