பிப்பா வாசித்து விருது வென்ற பர்வீன்

முவாமினா

தேசிய சீன இசைப் போட்டியில் 14- வயது பர்வீன் கோர், ‘பிப்பா’ இசைக்கருவியை வாசித்து இளை யர்ப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார். ஈராண்டுக்கு ஒருமுறை நிகழும் இப்போட்டி சென்ற ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை 11-ஆவது முறையாக நடைபெற்றது. தேசிய கலை மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி, சிங்கப்பூர் இளையர்களில் ஆகச் சிறந்த இசைக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது.

இந்தக் கடினமான போட்டியில் பல இந்திய மாணவர்கள் பங்கேற் றுச் சிறப்பித்தனர். அவர்களில் ஒருவர்தான் பர்வீன். இவர் சீனாவில் பிறந்தவர். இவருடைய தந்தை திரு ஜராமிர் சிங், ஒரு பஞ்சாபி. சீனாவில் 13 வருடங்களாக ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரிந்த திரு சிங், தம் மனைவி சோ வை வையை அங்கே சந்தித் துத் திருமணமும் செய்துகொண் டார். பர்வீன் தம் இசைப் பயணத் தைச் சீனாவில் நான்கு ஆண்டு களுக்கு முன் தொடங்கினார்.

ஆனால், மகளின் கல்வியைச் சிங்கப்பூரில் முடிக்க அவருடைய தந்தை விரும்பியதால் அவருடைய குடும்பம் 2016-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்தது.

பர்வீன் 2016-ஆம் ஆண்டில் முதன்முறையாகத் தேசிய சீன இசைப் போட்டியில் பங்கேற்று

‘பிப்பா’வை வாசித்துத் தொடக்க நிலைப் பிரிவில் முதல் இடத் தையும் வென்றார். அதிலிருந்து அவருக்குத் தம் இசைத் திறன் மீது நம்பிக்கை அதிகரித்தது. பர்வீன் தற்போது ‘சோட்டா’ எனப்படும் சிங்கப்பூர் கலைகள் பள்ளியில் பயில்கிறார். அவர் பள்ளியில் வாரந்தோறும் ‘பிப்பா’ பயிற்சிகளில் ஈடுபடுவார்.

இவ்வாண்டின் தேசிய சீன இசைப்போட்டிக்காக அவர் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்திற்குக் கடின மாகப் பயிற்சி செய்து தம்மைத் தயாரித்துக் கொண்டார். அவர் இசை மீட்டும் போது அதற்கு ஏற்பத் தம் முகபாவத்தையும் மேம்படுத்த கண்ணாடி முன் நின்று பயிற் சிசெய்வார். இதனால் பார் வையாளர்கள் தம்முடைய கச்சேரியை கூடு தலாக ரசிப்பார்கள் என்று நம்புகிறார்.