ஃபுளர்ட்டன் - அன்றும் இன்றும்

ஒரு காலத்தில் ஃபுளர்ட்டன் கட் டடம் என்றும் தலைமை அஞ்சலகக் கட்டடம் என்றும் அழைக்கப்பட்ட ஒரு முக்கிய தேசிய நினைவுச் சின்னம் இன்று ஃபுளர்ட்டன் ஹோட்டல் என்னும் ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உயர்ந்து நிற்கிறது. சிங்கப்பூர் நதியின் முகப்பில் உள்ள அந்தக் கட்டடம் பல வரலாற்றுப் பெருமை களைக்கொண்டது.

இந்த வட்டாரத்தில் இருந்த நீரிணைக் குடியிருப்புகளின் முதல் ஆளுநராக இருந்த ராபர்ட் ஃபுளர்ட்டன் என்பவரின் பெயர் தான் அந்தக் கட்டடத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. நம் குடியரசை அந்நிய கடற் படைத் தாக்குதல்களிலிருந்து எதிர்கொள்ள, அந்தக் கட்டடத் தில் ஃபோர்ட் ஃபுளர்ட்டன் என்னும் கோட்டையும் அரணாகக் கட்டப்பட்டிருந்ததை ஒரு சிலர் நினைவில் வைத்திருக்கக்கூடும்.

ஆனால் 1874ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் தலைமை அஞ்சலகம் கட்டப்படுவதற்காக அந்தக் கோட்டை வழிவிட்டது. ஃபுளர்ட்டன் கட்டடம் ஒரு காலத்தில் கடலிலிருந்து மீட்கப் பட்ட நிலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஆய்வாளர்கள் இன்றும் நினைவுகூர்வர்.

கடந்த 1928ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட அக்கட்டடம் அதிகாரபூர்வமாக ஆளுநர் ஹ்யூ கிளிஃபர்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஒரு தனிச்சிறப்பு என்னவென் றால், அந்தக் கட்டடம் திறக்கப் பட்டபின், நம் அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய இலாக்காக்கள், அலுவலகங்களை அங்குத் தொடங்கிச் செயல்பட்டு வந்தன என்பதுதான்.

சிங்கப்பூரின் முன்னாள் நிதி அமைச்சர் அமரர் டாக்டர் கோ கெங் ஸ்வீ, வரவுசெலவுத் திட்டத்தை அங்கிருந்த அலுவல கத்தில்தான் தயாரித்துள்ளார் என்பது தனிச்சிறப்பு வாய்ந்த செய்தியாகும். தலைமை அஞ்சலகம் ஃபுளர்ட்டன் கட்டடத் தில்தான் இருந்தது என்பதை மூத்தவர்கள் இன்றும் பெருமையோடு பகிர்வர். கட்டடத்தின் மறுமுனையில் வருமான வரி இலாகாவும் இருந் ததைச் சிலர் நினைவுகூர்வர்.

கடந்த 1942ஆம் ஆண்டு காலனித்துவச் சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் சரணடைந்த போது, அந்தக் கட்டடம் மருத்துவ மனையாகவும் பயன்படுத்தப் பட்டது. இன்று ஐந்து நட்சத்திர ஹோட்டலாக அது மாற்றப்பட்டு விட்டாலும் அந்த நினைவுச் சின் னம், சிங்கப்பூர் ஆற்றங் கரைக் கும் நாட்டுக்கும் தனிப்பெருமை யைச் சேர்த்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

எழுத்தும் ஆய்வும்: செ ப பன்னீர்செல்வம்

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்

12 Aug 2019

பழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்

முழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.
- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி

12 Aug 2019

கனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்

'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு

29 Jul 2019

இளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'