சமூக உணர்வை ஊட்டிய உரையாடல்

இந்திய சமூகம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு இளையர்கள் அளிக்கும் ஆதரவு போதுமானதாக இல்லை என்று உணரப்படுவதால் அந்த நிலையை மாற்ற இளையர் அணி ஒன்று களத்தில் இறங்கியது.
இந்திய சமூகத்திலுள்ள இளையர்களின் தேவைகளைப் புரிந்து, அவர்களுக்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக கலந்துரையாடல் ஒன்றை தமிழர் பேரவை இளையர் பிரிவு ஏற்பாடு செய்தது. இம் மாதம் 19ஆம் தேதி எம்டிஐஎஸ் வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இளையர்கள் தங்களது கருத் துகளைப் பகிர்ந்துகொண்டதோடு கலந்துரையாடலையும் வழிநடத்தினர்.
தமிழர் பேரவை இளையர் பிரிவு ஏற்கெனவே நடத்திய ஆய்விலிருந்து இளையர்கள் ஆறு முக்கிய தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தனர். அவற்றை மையமாகக் கொண்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
விளையாட்டு, கலைகளும் மொழியும், சமூக அரசியல், தொழில்நுட்பம், தொழில்முனைப்பு, சமூக மேம்பாடு ஆகிய தலைப்புகளின் தொடர்பில் கருத்துகளை முன்வைப்பதற்காக இளையர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்ட னர்.
கிட்டத்தட்ட 80 இளையர்கள் வெவ்வேறு துறைகளிலுள்ள பிரச் சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வுகாண முற்பட்டனர்.
சமூக அரசியல் குழுவில் பங் கேற்ற சுதே‌ஷினி தனராஜ், 23, கூறுகையில் "சமத்துவமின்மை ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டது.
"ஆனால் கல்வித்துறையில் அது ஒரு பிரச்சினையாக இருக் குமா என்ற கேள்வி எழுந்தது. கல்வியில் முன்னேற உழைப்பு மட்டும் போதுமா அல்லது குடும்ப பின்னணியும் பொருளியல் நிறை வும் தேவையா என்பதைப் பற்றி கலந்துரையாடினோம்.
"இந்த உரையாடல் மூலம் கல்வி சார்ந்த பல விவகாரங்களைப் பற்றி தெரிந்துகொண்டதோடு தகுதி அடிப்படையில் இயங்கும் நம் கல்வித்துறை தொடங்கவிருக் கும் புதிய திட்டங்கள் குறித்து ஆராயவும் எனக்கு உற்சாகம் கிடைத்தது," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மாணவியான சுதே‌ஷினி.
கலைகள், மொழி தொடர்பில் கலந்துரையாடிய குழுவில் பங் கேற்ற பொன்மொழி செம்பியன், 21, இக்கலந்துரையாடல் மூலம் கலைத்துறையினரின் பிரச்சினை களைப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
"பல சமூகக் கலைநிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும் அவை பார்வையாளர்களின் எதிர் பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறுவதாகக் கூறப்பட்டது.
"இவ்வாறு பார்வையாளர்களை நிகழ்ச்சியின்பால் ஈர்க்க நிகழ்ச்சி பற்றிய சுருக்கத்தை ஏற்பாட்டா ளர்கள் விளம்பரத்தில் குறிப்பிட லாம் என்ற கருத்து கலந்துரை யாடலில் பகிரப்பட்டது," என்றார் தேசிய கல்விக்கழக மாணவி யான பொன்மொழி.
"நடன, இசைத் துறைகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் குறைவான வருமானத் தின் காரணத்தால் இத்துறையில் பணிபுரிய பலரும் தயங்குவதாக பொன்மொழி கூறினார்.
ஆனால் கலந்துரையாடலில் கிடைத்த தகவல்களுக்குப் பிறகு தமது எண்ணங்களை மாற்றிக் கொண்டதாக அவர் குறிப்பிட் டார்.
கலைத்துறையில் அதிக ஆர் வம் உள்ளோர் வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் அவர்களே வாய்ப்புகளைத் தேடிச் செல்லவேண் டும் என்பதைத் தாம் கலந்துரை யாடல் முடிவில் கற்றுக்கொண்ட தாக பொன்மொழி கூறினார்.
விளையாட்டு தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்ற ருத்திரன் ராஜ், 24, தெரிவிக்கை யில், "விளையாட்டு என்ற கருப் பொருளைப் பார்த்ததும் காற்பந்து, கூடைப்பந்து போன்ற விளை யாட்டுகள் தொடர்பாக இருக்கும் என்று நினைத்தேன்.
"ஆனால், வழிநடத்தியவர்கள் ஆரோக்கியத்தையும் உடற்கட்டையும் பற்றி ஆராய்ந்து சுவாரசிய மான முறையில் இக்கலந்துரை யாடலைக் கொண்டு சென்றனர்," என்றார்.
உடலை ஆரோக்கியமாக வைத் துக்கொள்ள உடற்பயிற்சிகளும் ஆரோக்கிய உணவும் முக்கியம் என்று வலியுறுத்தியதுடன் அதற் கான காரணங்களையும் முயற்சி களையும் பற்றி கலந்தாலோசித் ததாக ருத்திரன் சொன்னார்.
"தற்போது சிங்கப்பூரில் இந் தியர்கள் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
"இந்திய சமூகத்தினரிடையே ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க 'பீச் டே' (Beach Day) என்ற நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.
அந்த நாளில் அனைவரும் கடற்கரையில் ஒன்றிணைந்து விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்கள் நேரத்தை ஆக்கபூர்வமாக செலவிடலாம் என்ற கருத்தை சிலர் பகிர்ந்துகொண்டனர்.
"இத்தகைய விவகாரங்களில் என்னைப்போலவே சிந்திக்கும் மற்ற இளையர்களைச் சந்தித்துப் பேசியது சுவாரசியமாகவும் பயன் உள்ளதாகவும் இருந்தது," என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக மாணவரான ருத்திரன்.
வர்த்தக நிர்வாகக் கல்வி மாணவரான முஹம்மது ஆ‌ஷிக் தொழில் முனைப்பு குழுவில் பங் கேற்று வர்த்தகத் துறை சார்ந்த பல கருத்துகளை அறிந்துகொண் டார். வர்த்தகம் சார்ந்த விவகாரங் களைப் பற்றி இளைய சமுதாயத் தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற கலந்துரையாடல்கள் சிறந்த அடித்தளத்தை உருவாக்கித் தருவதாகக் குறிப்பிட்டார்.
"பெரும்பாலான இளையர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வர்த்தகத் துறையில் ஈடுபடத் தயங்குகிறார்கள்.
"ஆனால், வர்த்தகத் துறைக்கு விடாமுயற்சியுடன் வெற்றி தோல்வி இரண்டையுமே சந்திக்கத் தயாராக இருக்கும் மனப்போக்கும் அவசியம். அதன் தொடர்பில் ஆழ மாக ஆராய்ந்து பேச வாய்ப்பளித்த இக்கலந்துரையாடல் தனித்தன்மை வாய்ந்தது," என்றார் ஆ‌ஷிக், 22.
கலந்துரையாடலை வழிநடத் திய 20 இளையர்களில் ஒருவரான சண்முகம் திருப்புரசுந்தரம் இந் நிகழ்ச்சியின்வழி கிடைத்த அனுபவம் பல வகையில் தமக்குப் பல னளித்ததாகச் சொன்னார்.
"கலந்துரையாடலை வழிநடத் தியதன் மூலம் மேடைப்பேச்சுத் திறன்களை வளர்த்துக்கொண்டேன்.
"அதுமட்டுமல்லாமல் சமூகம் மேம்பட என்போன்ற சம வயதினர் ஆராயும் முறையையும் இக்கலந் துரையாடலின் மூலம் தெரிந்து கொண்டேன்," என்றார் 20 வயது சண்முகம்.
முன்ன தாக, கலந்துரையாடலை வழிநடத்துபவர்களுக்காக சிங்கப் பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்க இளையர் மன்றம், ஒரு நாள் பயி லரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
இளையர்களுக்காக நடத்தப் பட்ட இந்த ஐந்தரை மணி நேரக் கலந்துரையாடலுக்குப் பிறகு தமிழர் பேரவை இளையர் பிரிவின் அதிகாரபூர்வ பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதற்கு செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பின ரும் கல்வி அமைச்சின் தமிழ்க் கற்றல் வளர்ச்சிக் குழு தலைவரு மான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!