மானம் காக்க தற்காப்புக் கலை

மானபங்கத்திற்கு ஆளானதை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் இருந்த ஸ்டெல்லா தம்மைத் தற்காத்துக்கொள்ள தனது உடல்பலத்தையும் மனபலத்தையும் வளர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். 
கடந்த ஆறு ஆண்டுகளாக இடைவிடாது தற்காப்புக் கலைகளில் பயிற்சிபெற்று  வருகிறார். 
“ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்போல் இப்போது நடந்தால் நான் அந்த ஆடவரின் கை விரலை உடைக்கக் கூடத் தயங்கமாட்டேன்,” என்றார் ஸ்டெல்லா.
மானபங்கச் சம்பவங்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதி யாகவும் எதிர்க்கவும் இந்தப் பயிற்சிகள் பெண்களுக்குக் கைகொடுக்கின்றன. அதேநேரத் தில், உடல்நலம், கட்டான உடல், உற்சாகமான வாழ்க்கை போன்ற வற்றுடன் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் தற்காப்புக் கலைப் பயிற்சி பெண்களுக்கு உதவுகிறது.
உடல் நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் 26 வயது நூர் ஆயிஷா கடந்த இரண்டு ஆண்டு களாக ‘களரி அகாடமி’யில் பயிற்சி பெற்று வருகிறார்.

மானபங்க குற்றங்கள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் ஆண்டுக்காண்டு மானபங்கச் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. கடந்த ஆண்டு மானபங்கம் தொடர்பில்  1,747 புகார்கள் பதிவாகியுள்ளன.  இது 2017ஆம் ஆண்டின் 1,561 சம்பவங்களைவிட 11.9% அதிகம் என்று போலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிக மாகி வருவதை குறிப்பிட்ட ஆயிஷா, மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது தோழிக்கு நேர்ந்ததை நினைவுகூர்ந்தார்.
வெளியே சென்று வீடு திரும் பிய கங்கா (உண்மைப் பெயர் அல்ல), தமது அடுக்குமாடி கீழ் தளத்தில் மின்தூக்கிக்குக் காத் துக் கொண்டிருந்தார். 
மின்தூக்கி வந்தபோது, அச் சமயத்தில் அங்கு வந்த ஆடவர் ஒருவரும் கங்காவுடன் மின்தூக்கி யில் ஏறினார். 
சில வினாடிகளில் கங்காவிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார் அந்த ஆடவர். 
கங்கா இறங்க வேண்டிய தளம் வந்தது. அந்த ஆடவரும் கங்கா வுடன் வெளியில் வந்தார். 
வெளியே வந்ததும், கங்காவின் கையைப் பிடித்துக் குலுக்கிய அவர், எதிர்பாராதவிதமாக கங்கா வின் கன்னத்தில் முத்தமிட்டார். 
அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாமல் நின்ற கங்காவின் முகத்தைக் கண்டு பதற்றம் அடைந்த அந்த ஆடவர், உடனடி யாக  மின்தூக்கியில் ஏறி கீழ் மாடியைச் சென்றடைந்தார்.
இதுபோன்ற நிகழ்வுகளில் தம்மைத் தற்காத்துக்கொள்வது அவசியம் என்று உணர்ந்த ஆயிஷா, களரி பயட் தற்காப்புக் கலையைப் பயின்று வருகிறார்.
பெண்கள் எவ்வாறு தங்களது உடலைப் பயன்படுத்தி ஆபத்தைத் தடுக்கலாம், உடலை எப்படி வலு வாக்கலாம் என்பதைத் தற்காப்புக் கலை மூலம் தாம் அறிந்து கொண்டதாக ஆயிஷா குறிப்பிட் டார்.
“சுவடு எனப்படும் 4 திசை களில் தாக்கும் முறை, கை தற்காப்புப் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியதுதான் களரி. மான பங்கம், பாலியல்ரீதியான பிரச்சி னைகளை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க இப்பயிற்சிகள் துணை புரியும்,” என்றார் ஆயிஷா.

மானபங்க குற்றவாளிகளை வெளிப்படுத்த வேண்டும்

மானபங்கம் செய்வோரை போலிசில் புகார் செய்ய  எவ்வித மான அவமானமும்  படத் தேவை யில்லை  என்பதை சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் அனை வருமே உணர வேண்டும். 
நாம் மானபங்கச் செயலுக்கு உள்ளானால் அல்லது  மற்றவர்கள்  மானபங்கம் செய்யப்படுவதை கண்டால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளி யைத் தடுக்க வேண்டும். 
அவ்வாறு  தைரியத்துடன் செயல்பட உடல் உறுதி கை கொடுக்கும் என்பதை பலரும் இப்போது உணர்ந்து வருகின்றனர்.
எந்தவித நிலையிலும் தம்மை மற்றவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள கடந்த ஓராண்டாக களரி பயட் பயின்று வருகின்றார் மஹாலெஷ்மி யோகராஜா.
‘களரி அகாடமி’யில் சிலம்பாட் டம், மெய் பயட், கை தற்காப்பு என பல தற்காப்பு நடவடிக்கை களில் ஈடுபடுவதன் மூலம் எவ்வித வாழ்க்கை சூழ்நிலைகளுக் கும் ஏற்றவாறு நடந்துகொள்ள தாம் கற்றுக்கொண்டதாக மஹாலெஷ்மி குறிப்பிட்டார்.
அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் அவர் தைரியமாக பல இடங்களுக்குத் தனியாகச் செல்லவும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் தற்காப்புக் கலை யைக் கற்று வருவதாகக் கூறி னார்.
“ஒருமுறை உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவரைப் பொது நூலகத்தில் தொந்தரவு செய்த ஆடவரைக் காவல் அதி காரிகளிடம் நான் பிடித்துக் கொடுத்தேன். அந்த மாணவிக்கு நேர்ந்தது எந்த வயதினருக்கும் நடக்கலாம்,” என்றார் அறிவிய லாளராகப் பணிபுரியும் 27 வயது மஹாலெஷ்மி.
“இதுபோன்ற தொல்லைகளி னால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவற்றைப் பற்றி அதிகம் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். 
“எனினும், நாம் எந்தநேரத்திலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வதால் தனக்கும் பாதிப்பிற்குள்ளாகும் மற்றவர்களுக்கும் உதவலாம்,” என்றார் அவர்.

மனபலம் தரும் உடல் பலம்

#மீடு, #ஓய் ஐ டிடிண்ட் திங் ரிபோர்ட் போன்ற இயக்கங்கள் தற்போது பலரையும் வெளிப் படையாகப் பேச வைத்துள்ளன. ஆனால், பேசுவது மட்டும் போதாது,  இத்தகைய குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டும். 
குற்றங்களைத் தடுக்க சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இருந்த போதிலும், குற்றச்செயல் நடை பெறாமல்  விழிப்புடன் செயல்பட மக்கள் பழக வேண்டும்.
மானபங்கம், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்செயல் களைத் தடுப்பதற்கு வலிமை மிக உதவும் என்பது உளவியல் அறிஞர்களின் கருத்து.
உடல் வலிமை ஏற்படும்போது மனவலிமையும் ஏற்படுகிறது என்று தற்காப்புக் கலைகளைப் பயின்று வரும் பெண்கள் பலர் குறிப்பிட்டனர்.
பகுதி நேர வேலை முடிந்து ரயிலில் பயணம் செய்துகொண்டி ருந்த தோழியை ஓர் ஆடவர் பின் தொடர்ந்த சம்பவத்தைப் பற்றி விளக்கினார் ரூபிணி முத்துராமன். 
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரயில் பயணத்தின்போது அவரது தோழி உஷாவை (உண்மைப் பெயர் அல்ல) ஆடவர் ஒருவர் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்ப்பதை உணர்ந்த உஷா பதற்றத்தில் ரயிலைவிட்டு இறங்கினார்.
அந்த ஆடவரும் உஷாவுடன் அதே ரயில் நிலையத்தில் இறங்கி, பின்தொடர ஆரம்பித்தார்.
சிறிது தூரம் சென்ற பிறகு மக்கள் கூட்டம் குறைந்த இடம் ஒன்றை உஷா கடக்க நேர்ந்தது. 
அப்போது அந்த ஆடவர் உஷாவை நெருங்கி வந்து, நட்பு பாராட்டலாமா என்று கேட்டார். பயத்தில் நடுங்கிய உஷா காவ லரிடம் புகார் செய்யப் போவதாகக் கூறி அவ்விடத்தை விட்டு ஓடி னார்.
உஷாவின் மூலம் அந்தச் சம்பவம் பற்றித் தெரிந்துகொண்ட ரூபிணி இதுபோன்ற நிகழ்வு களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ‘முவே தாய்’ எனும் தாய்லாந்து நாட்டின் தற்காப்புக் கலையை நான்கு ஆண்டுகளுக்கு முன் பயிலத் தொடங்கினார். 
வேலை காரணமாக தொடர்ச்சி யாக வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்றாலும் நான்கு மாதப் பயிற்சியில் அடிப்படைத் தற்காப்புத் திறன்களை அறிந்து கொண்டதாகவும் பல முக்கியமான உத்திகளைக் கற்றுக்கொண்ட தாகவும் ரூபிணி குறிப்பிட்டார்.
கை, கால்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் உத்தி களைக் கற்றுக்கொண்டதன் மூலம் பெண்களாலும் தன்னிச்சை யாகச் செயல்பட முடியும் என்ற தன்னம்பிக்கை என்னுள் ஏற்பட் டது,” என்றார் எண்ணெய்த் தொழிற்துறையில் பணிபுரியும் ரூபிணி.
முன்பு தமது தோழியைப் போலவே சற்று பயந்த சுபாவத் துடன் இருந்த ரூபிணி தற்போது தைரியத்துடனும் தன்னம்பிக்கை யுடனும் வெளி இடங்களுக்குச் சென்று வருவதாகக் குறிப்பிட்
டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா

15 Jul 2019

தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

பண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)

08 Jul 2019

வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கல்வியாளர்கள்