புத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்

விளம்பரம் தயாரிப்பது, திரைக் கதை எழுதுவது, வானொலி நிகழ்ச்சிகள் படைப்பது என தமிழ் மொழியை வகுப்பறைக்கு அப்பால் கற்கும் வாய்ப்பைப் பெற்றனர் சுமார் 200 உயர்நிலை இரண்டு மாணவர்கள். உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சென்ற மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற தமிழ்மொழி கற்றல் விழாவில் பங் கேற்ற மாணவர்கள் வெவ்வேறு நடவடிக்கைகளில் குழுக்களாகச் செயல்பட்டனர். 
உரியடி, கபடி என நாட்டுப்புற விளையாட்டுகளில் பங்கேற்கும் வாய்ப்பும் மாணவர்களுக்குக் கிடைத்தது. மாணவர்களின் சிந் தனைத்திறன் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவும் என்று கூறினார் ஏற்பாட்டுக்குழு வைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு ராமர். தமிழ்மொழியைக் கற்று அதனை அன்றாட வாழ்வில் பயன் படுத்த மாணவர்கள் சுயமாக ஊக் கம் பெறவேண்டும் என்பது இந்த விழாவின் நோக்கங்களில் ஒன்று என்றும் அவர் கூறினார். 
வகுப்பறையில் மட்டுமே தமிழ் மொழியைக் கற்கவேண்டும், பேச வேண்டும், பயன்படுத்தவேண்டும் என்றில்லாமல் எங்கும் அம்மொழி யைப் பயன்படுத்தலாம் என்ற எண் ணமும் உத்வேகமும் மாணவர் களுக்குத் தோன்றவேண்டும் என்று அவர் தெரிவித்தார். 
பத்து வகையான நடவடிக் கைகள் அத்தனையும் தொகுக்கப் பட்டு விழாவின் முடிவில் அரங்கத் தில் மாணவர்களின் பார்வைக்காக வழங்கப்பட்டன. தினசரி வாழ்க் கைச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந் திருந்தன.  
தமிழ்மொழி கற்றல் விழாவை ஒட்டி பிப்ரவரி 2ஆம் தேதி தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 300 பேருக்கு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்

18 Mar 2019

முழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி