முழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி 

திறந்த மனப்பான்மை, பன்முகத் தன்மை, மனவுறுதி. இந்த மூன்று அம்சங்கள் எப்படி சிங்கப்பூரின் துரித வளர்ச்சிக்கு பங்காற்றின என்பதை 30 வினாடிகள் உயிரோவியமாக உருவாக்கின பள்ளிகள். அவற்றில் சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாண வர்களுக்கு 'என்.யி.மே‌ஷன்' (N.E.mation) விருது கிட்டியது. 
பள்ளிகளுக்கான இந்த 'என்.யி.மே‌ஷன்' உயிரோவியப் போட்டியை 2007ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்து வருகிறது நெக்சஸ் அமைப்பு. முழுமைத் தற் காப்பு தொடர்பில் மாணவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தப் போட்டி வாய்ப்பு அளிக்கிறது.
'நாம் ஒன்றிணைந்து சிங்கப்பூரை வலுவாக வைத்திருப் போம்' எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு உயர்நிலைப் பள்ளி பிரிவு, இளையர் பிரிவு என இரு பிரிவுகளில் போட்டி நடத்தப் பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத் திலிருந்தே மாணவர்கள் இப்போட் டிக்கு பதிவு செய்யத் தொடங்கிவிட் டனர். அதனைத் தொடர்ந்து கடந்து ஆண்டு இறுதி வரையில் இவர்கள் உயிரோவியம் தொடர் பான பயிற்சிப் பயிலரங்குகளுக்குச் சென்று நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு தங்களின் உயிரோவிய  படைப்புகளுக்கு உயிர் கொடுக்க முனைந்தனர்.  
அதில் சிறந்த பத்து குழுக்கள் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon