விளையாட்டில் வீர மங்கையர் 

ஆண்கள் அதிகமாக இருக்கும் திவியா ஜி. கே.யின் குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடும்போதெல் லாம் தன்னையும் சேர்த்துக்கொள் ளுமாறு  கேட்கும்போதெல்லாம் அவர் ஒரு பெண் என்றும் அதனால் அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் அவர்கள் கேலி செய்வதுண்டு. 
அதையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கிரிக்கெட்டில் சாதிக்க முடிவெடுத்தார் திவியா. பந்துவீசுதல், பந்தைத் தடுத்தல் போன்ற சிறு சிறு பயிற்சிகளை 11 வயதிலிருந்தே தன்னிச்சையாகப் பயின்றார். 
அந்த விளையாட்டின் நுணுக் கங்களை அறிந்துகொள்ள தொலைக்காட்சியில்  கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பார். 
கிரிக்கெட்டைப் பொழுதுபோக் காக விளையாடத் தொடங்கிய திவியா படிப்படியாக அதில் முன்னேற்றம் அடைந்தார்.  
2006ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்ததுடன் அணியின் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு இரட்டிப்புப் பெருமைக்குரியவரானார். 
மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பை முடித்துள்ள திவியா, கிரிக்கெட்டில் மேலும் அங்கீகாரம் பெறவேண்டும் என்று விரும்பினார். வெளிநாட்டுப் போட்டிகளில் துடிப்புடன் பங்கேற்றார்.  
2013ஆம் ஆண்டில் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் ஆண்களுக் கான கிரிக்கெட் லீக்கில்   (இரண் டாம் நிலைப் பிரிவு)  பங்கேற்று, கிரிக்கெட் விளையாட்டு ஆண் ஆதிக்கமுடையது என்ற எண் ணத்தை உடைத்து, பாலின சமத்துவ உணர்வை ஏற்படுத்தி னார். ஆண் அணியுடன் விளை யாடிய முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகளை எடுத்து தமது திறமையை நிரூபித்தார்.
“ஆண்கள் அணியில் அவர்களுக்கு நிகராக விளையாடுவது சுலபமா னது அல்ல. அதிகமான நேரத்தை அதற்காக நான் அர்ப் பணித்துள்ளேன், என்றார் 32 வயது திவியா.
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பெண்ணாக அவர் படைத்த சாதனைகள் எண்ணற்றவை என் றாலும் ஒரு சராசரி கிரிக்கெட் விளையாட்டாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மறக்கவில்லை திவியா.
பயிற்சியாளர்களை வரவழைப் பது, கிரிக்கெட் சார்ந்த பொருட் களை வாங்குவது போன்ற பல சேவைகளை வழங்க சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைவரான திரு சேட்டன் சூர்யவன்‌‌ஷியுடன் சேர்ந்து 'ஸ்போர்ட்ஸ்கிங்டம்' எனும் தனியார் நிறுவனத்தை 2017ஆம் ஆண்டில் தொடங்கினார் திவியா.
இவரது சாதனையை அங்கீ கரிக்கும் விதமாக லிஷா மகளிர் அணி இவருக்கும் ‘ஹெர்குலீயன் டொயென்’ இளம் சாதனையாளர் விருதை இவ்வாண்டு வழங்கிச் சிறப்பித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா

15 Jul 2019

தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

பண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)

08 Jul 2019

வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கல்வியாளர்கள்