மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்

ரேவதி மனோஹரன்

தமிழ் இலக்கியத்தை இளையர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏழாவது முறையாக இவ்வாண்டு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் 'பார்வை' எனும் நிகழ்ச்சிக்கு ஏற் பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சி உள்ளூர் எழுத் தாளர் திரு மா. இளங்கண்ணன் எழுதிய 'வைகறைப் பூக்கள்' நாவலை மையமாகக் கொண்டு நடந்தேறியது.
இரு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இம்மாதம் எட்டாம் தேதியன்று வெவ்வேறு உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 20 மாணவர் களுக்கான இலக்கிய பயிலரங்கு தேசிய நூலக வாரிய வளாகத்தில் இடம்பெற்றது.
பயிலரங்கில் மன்ற உறுப்பினர் கள் 'வைகறைப் பூக்கள்' நாவலை கேளிக்கைச் சித்திர வடிவமாகத் தயாரித்து வழங்கினர்.
கதையை சுவாரசியமாகப் படித்துப் புரிந்துகொள்ள இது உதவியது.
மேலும் கதையுடன் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது என்று பல நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
நடவடிக்கைகள் யாவும் மாணவர்களின் சிந்தனையாற் றலை வெகுவாகத் தூண்டின என்று பயிலரங்கில் பங்கேற்ற ஆசிரியர்களும் பகிர்ந்துகொண் டனர்.
நாவலைக் கேளிக்கைச் சித்திர வடிவில் வழங்கியது கற்றலுக்குப் பெரும் தூண்டுதலாக இருந்தது என்று சில மாணவர்கள் கூறினர்.
இரண்டாம் நாளான இம்மாதம் 10ஆம் தேதி அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நிகழ்வு நடைபெற்றது.
'ஏகேடி கிரியேஷன்ஸ்'-ஐ சேர்ந்த திருமதி ராணி கண்ணா கதை சொல்பவராக வந்து நிகழ்ச் சியைத் தொடங்கி வைத்தார். 'வைகறைப் பூக்கள்' நாவலில் குறிப்பிட்ட சில சம்பவங்களை மாணவர்களின் பார்வைக்கு இந்த நாடகம் வழங்கியது.
நாவலின் சில சம்பவங்கள் இசை, நடனம் மற்றும் கவிதையின் வாயிலாக நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்ற மாணவர்களால் படைக்கப் பட்டன.
இந்த நாடகத்தைத் தொடர்ந்து, திருமதி இலக்கியா செல்வராஜியின் தலைமையில் 'சிங்கைத் தமிழ் இலக்கியம்' என்ற தலைப்பில் கார சாரமான கலந்துரையாடல் நடந் தேறியது.
அதில், திரு ஆனந்தக் கண்ணன், செல்வி ஹரிணி, முனைவர் ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரங்கத்தில் அமர்ந்திருந்த 300க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் தங்களது கருத்துகளையும் பகிர்ந் துகொண்டனர்.
இவை அனைத்தையும் ஒருங் கிணைக்கும் வண்ணம், சிங்கைத் தமிழ் இலக்கியம் என்பது எழுத்து வடிவில் மட்டும் அடங்காது, அதனை இயல், இசை, நாடகம் என்று முத்தமிழின் வாயிலாக நாம் படைக்கலாம் என்ற ஒருமித்த கருத்தை திருமதி இலக்கியா முன்வைத்தார்.
சிங்கையில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இதில் பங்குண்டு என்றும் இனி தமிழ் இலக் கியத்தை மேன்மேலும் வளர்ப்போம் என்றும் கூறிக் குழு விவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் திருமதி இலக்கியா.
பலதரப்பட்ட இளைஞர்களும் தமிழ் அறிஞர்களும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து, கலந்துரையாடி, முன்னேற்றத்தை நோக்கிய தமிழ் இலக்கியப் பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!