நினைவில் நிற்கும் 21ஆவது பிறந்தநாள்

பதின்மப் பருவத்தில் இருப்பவருக்கு பெரியவர் எனும் அங்கீகாரத்தைக் கொடுக்கும் வயது, 21. அதனால், 21வது பிறந்தநாள் ஒருவருக்கு மறக்கமுடியாத பிறந்தநாளாக உள்ளது. 
ஒருவர் வாழ்க்கைப் பயணத்தில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைப்பதை அவரவர் தங்களின் தனி பாணியில் கொண்டாடுவதுண்டு. 21வது பிறந்தநாளை மிகச் சிறப்பாக, பெரும் செலவில் கொண்டாட வேண்டும் என்பது சிலரது கருத்து. 
ஆனால், ஒருநாள் கொண்டாட்டத்திற்கு பெருமளவில் பணம் செலவழிப்பது தேவையற்றது என்பது வேறு சிலரின் கருத்து. 
கொண்டாட்டம் தேவைதான். ஆனால், ஆடம்பர விருந்து, உடைகள் போன்ற செலவுகள் தேவைதானா, அந்தப் பணத்திற்கு பயனுள்ள பொருட்களை வாங்குவது, சுற்றுலா செல்வது என அர்த்தமுள்ள செலவுகளைச் செய்யலாம் என மேலும் சிலர் கருத்துரைத்தனர். இங்கே மூன்று இளையர்கள் தங்களது பிறந்தநாள் விழாக்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளனர். 

விலா‌ஷினி சுப்பிரமணியம்:
விலா‌ஷினி சுப்பிரமணியத்தின் 21வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட ஆயத்தமாகினர் விலா‌ஷினியின் உற்றார் உறவினர்கள். 
ஆனால், ஆடம்பரத்தை விரும்பாத விலா‌ஷினி, குடும்பத்தினருடன் வீட்டிலேயே எளிமை யாகத் தமது பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்தார்.
அவரின் தாயார் திருமதி கண்ணகி, மகளின் மனதைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக் கொண்டார்.
“தமது பிறந்தநாளைப் பெரி தாகக் கொண்டாடுவதில் ‌‌விலா‌ஷினிக்கு என்றைக்கும் நாட் டம் இருந்ததில்லை. 
“பிறந்தநாளைக் கொண்டாடு வதற்கு அவள் சம்மதிக்காதது எனக்கு மனவருத்தத்தை அளித் தாலும் அவளை வற்புறுத்த நான் விரும்பவில்லை,” என்று கூறினார் 59 வயது திருமதி கண்ணகி.
பிறந்தநாள் கொண்டாட்டத் தினால் குடும்பத்தினருக்கு வீண் செலவு வைக்கக்கூடாது என்பது விலா‌ஷினியின் விருப்பம்.
எனவே, பிறந்தநாளன்றும் வழக்கமான நாட்களில் செய்யும் அதே பணிகளைச் செய்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் பயிலும் இவர், வார நாளில் வந்த தன் பிறந்தநாளன்று அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம்போல் தவறாமல் சென்றார்.

ஜெயசீலன் காளிமுத்து:
ஜெயசீலனின் 21வது பிறந்தநாளை அவரது அத்தையும் மாமாவும் மிகக் கோலாகலமாக  ஏற்பாடு செய்தனர்.
'ஹோட்டல் கிராண்ட் பசிஃபிக்'கில், சிறப்பு அறை ஒன் றில் குடும்பத்தார் உட்பட சுமார் 200 உறவினர்கள் சூழ அவரது பிறந்தநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கண்ணைக் கவரும் அலங் காரங்கள், பலவிதமான உணவு வகைகள், பிறந்தநாள் நிகழ்ச்சியை வழிநடத்துபவருக்கு ஏற்பாடு செய் வது என அனைத்து ஏற்பாடு களுக்கும் ஆன செலவு கிட்டத் தட்ட $20,000. 
ஆடல், பாடல், விளையாட்டு என அனைத்தும் வந்திருந்த விருந்தினர்களை உற்சாகப்படுத் தியது. 
நடிகை நயன்தாராவின் தீவிர ரசிகரான ஜெயசீலனுக்கு பிறந்த நாள் பரிசாக அந்நடிகையின் படம் அச்சிடப்பட்ட கேக் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது.

இரட்டையர் ஜெசிக்கா, ஜேசனின் இரட்டிப்பு மகிழ்ச்சி:
ஜெசிக்கா, ஜேசன் இரட்டையர்கள் தங்களின் 21ஆவது பிறந்தநாளை யும் மிகச் சிறப்பாகக் கொண்டாடி னர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வரும் இவர் களின் ஒற்றுமையைப் போற்றுவதற் காகவே இவர்களுடைய 21ஆவது பிறந்தநாள் பெற்றோர் ஏற்பாட்டில் நடந்தது.
நடுத்தர வருமானமுடைய குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு எளிமையான முறையில் உற்றார் உறவினர்களின் வாழ்த்துகளுடன் இவ்விழாவைக் கொண்டாடினர்.
உற்றார் உறவினர்கள், நண் பர்கள் எனக் கிட்டத்தட்ட 200 பேரின் வாழ்த்துகளுடன் கொண் டாடப்பட்ட விழாவில், அறுசுவை உணவு, ஆடல் பாடல் நிகழ்ச் சிகள், விளையாட்டுகள் ஆகி யவை இடம்பெற்றன.
புதிய உடைகள், அலங்காரம் என பெற்றோர் செலவு செய்தது சுமார் $5,000. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon