தமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்

இளையர்களின் தமிழார்வத்தைத் தூண்டும் வகையில் புகைப்படங் கள், நகைச்சுவைக் காணொளி போட்டிகள் ஆகியவற்றுடன் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் 'களம் 2019' நடந்தேறியது.
"பலருக்கு பலவிதமான திறன் கள் உண்டு. அவற்றுடன் தமிழை இணைக்க வழிகள் உண்டு. புகைப்படங்கள் எடுப்பதிலும் நகைச்சுவைக் காணொளிகளைப் பார்ப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்ட இளையர்களிடம் தமிழ் புழக்கத்தை அதிகரிக்கும் நோக் கில் இவ்வாண்டின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது," என்றார் களம் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் ரவீணா சிவகுருநாதன், 21.
நிகழ்ச்சியை ஒட்டி, பல்கலைக் கழக மாணவர்களுக்கும் உயர் கல்வி நிலைய மாணவர்களுக்கும் இரு பிரிவுகளாகப் புகைப்படப் போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து படைப்புகள் களம் நிகழ்ச்சியின்போது காட்டப் பட்டன.
போட்டியில் பங்கேற்றவர் களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் புகைப்படம் எடுப்பது குறித்த பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புகைப்படக் கலைஞரான திமத்தி டேவிட் பயிலரங்கை வழிநடத்தினார்.
பல்கலைக்கழகப் பிரிவில் 'ஆண் பிள்ளை vs பெண் பிள்ளை' என்ற தலைப்பிலும் உயர் கல்வி நிலையப் பிரிவில் தமிழ் மொழியின் மாற்றத்தைக் குறித்தும் புகைப்பட படைப்புகள் இடம் பெற்றன.
புகைப் படங்களின் வழி மாண வர்கள் ஒரு கதையையோ கருத் தையோ வெளிப்படுத்த வேண்டி யிருந்தது.
பல்கலைக்கழகப் பிரிவில் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றக் குழுவான 'வேட்டையாடு வெளியீடு' முதல் பரிசு பெற்றது. உயர்கல்வி நிலையப் பிரிவில் ஈசூன்-இனோவா தொடக்கக் கல்லூரியின் 'அக்கினிச் சிறகு' குழு வெற்றிபெற்றது.
"கொடுக்கப்பட்ட தலைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிட்டிருந்தா லும் இருபாலாரும் ஒன்றே என்ற வகையில் எங்கள் படைப்பு அமைந் தது," என்றார் 'வேட்டையாடு வெளியீடு' குழு உறுப்பினரான சீனிவாசன் ஸாந்தினி, 19.
"ஒரு குழந்தை பிறக்கும்போது ஆண், பெண் வித்தியாசம் பார்க் கப்படுவதில்லை. ஆனால் வளர வளர, பாலினம் உட்பட சமுதாயத் தின் பல கோட்பாடுகள் அந்தக் குழந்தைக்குள் திணிக்கப்படுகின் றன. அதையே எங்கள் படங்களி லும் படங்களுக்கான கவிதைநடை விளக்கத்திலும் வெளிப்படுத்தி னோம்," என அவர் விளக்கினார்.
"தொன்மையான தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்க கோயில்கள், அரும்பொருளகங் களைக் கறுப்பு- வெள்ளை படங் களாக எடுத்திருந்தோம். நவீன காலத்தில் தமிழ் வாழும் மொழி யாக இருக்கிறது என்பதைக் காட்ட கோலம், விளக்கில் வரும் நெருப்பு போன்றவற்றைக் காண் பித்தோம்," என்றார் 'அக்கினிச் சிறகு' குழு உறுப்பினரான உமையாள் சுப்பிரமணியம், 17.
உயர்கல்வி நிலையப் பிரிவில் இரண்டாம் நிலையில் வந்த நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரி யைச் சேர்ந்த 'அருவி' என்னும் குழுவும் தமிழ் கலாசாரத்தை நவீன காலத் தின் மாற்றங்களுடன் ஒப்பிட்டுத் தங்கள் படைப்பினில் வெளிக்கொண்டு வந்தனர்.
"முன்னதாக கையால் வரையப் பட்டு வந்த கோலம், இப்போது பெரும்பாலும் 'ஸ்டிக்கராக' வீட்டு வாசலில் ஒட்டி வைக்கப்படுகிறது. அதுபோல் படங்கள் வழி அன்றைய காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் தமிழ் பண்பாட்டில் உள்ள மாற்றங்களைக் காண்பித்தோம்," என்றார் அருவி குழு உறுப்பினரான சண்முகமதி செந்தில் நாதன், 17.
நகைச்சுவைக் காணொளி களுக்கான போட்டியும் களம் நிகழ்ச்சியின் மற்றொரு அங்கமாக களத்தில் இடம்பெற்றது.
சிங்கப்பூர் மாணவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையில் காணொளிகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
முதல் பரிசை சரவணன் சண்முகத்தின் 30 வினாடி நகைச் சுவைக் காணொளி வென்றது.
"இன்றைய இளையர்களிடம் பெரும்பாலும் கவனிக்கும் நேரம் குறைவாக உள்ளது. பலருக்குப் பொறுமையும் இல்லை. ஆழமான கருத்துகளைச் சுருக்கமாக, வேக மாக இளையர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அதற்குப் படங்களும் காணொளிகளும் வழி வகுக்கின்றன. தமிழ்மொழி காலத்திற்கேற்ப மாறி வருவதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த சான்றாக அமைந்தது," என்று கூறினார் தேசிய பல்கலைக்கழக மாணவ ரான சரவணன், 24. 2019-04-08 06:10:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!