நிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது

சமூகம், பொருளியல், அரசாங்கம், உலகளாவிய நிலவரம் போன்ற விவகாரங்கள் குறித்து நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கிட்டத்தட்ட 700 இளையர்களிடம் சென்ற மாதம் 28ஆம் தேதியன்று கலந்துரையாடினார். 
கலந்துரையாடலில் எதிர்கால வாய்ப்புகள் குறித்துப் பேசப்பட்ட போது, இயந்திரமயமாக்கலினால் மனிதர்களுக்கான வேலைகள் குறைந்து விடுமா என்ற கேள்வியை மாணவர்கள் முன் வைத்தனர்.
தொழில்நுட்பத்தின் தாக்கம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, வழக்கமான பணிகளைத் தானி யக்கமயமாக்குவது அவசியமானா லும் மிகவும் சிக்கலான பணி களுக்கு மனிதர்களின் அனுபவ மும் புத்தாக்கமும் தேவைப்படும் என்றார் அமைச்சர்.
அமைச்சரின் விளக்கம் குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பயிலும் 22 வயது மாணவரான சங்கர் சாய் கணேஷ்,  “தொழில் நுட்பத்தைக் கண்டு அஞ்சாமல் மாறி வரும் துறைகளுக்கு ஏற்ப நாம் நம் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்,” என்றார்.
அதனைத் தொடர்ந்து சிறு பான்மை இனத்தைச் சேர்ந்தவர் பிரதமராவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிப்பதற்குமுன் அரங்கத்தில் இருந்த இளையர் களை நோக்கி எத்தனை பேர் அத்தகைய சூழலுக்குச் சம்மதிப்பர் என வினவினார் அமைச்சர் ஹெங். 
அதற்கு கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் தங்கள் கைகளை உயர்த்தினர். இளம் தலைமுறை யினரின் சம்மதம் ஒரு நல்ல அறி குறியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் கலந்துரை யாடலில் பங்கேற்ற செஜால் பாகாரியா, 21, சிறுபான்மையினர் குறித்த விவகாரம் தனக்கு மிக வும் முக்கியமானதாக அமைந்த தாகப் பகிர்ந்துகொண்டார். 
இனம் காரணத்தால் பள்ளி நடத்திய முகாம் ஒன்றிலிருந்து ஒதுக்கப்பட்ட தன் அனுபவத்தைச் சுட்டிக்காட்டி,  “சிங்கப்பூர் என்பது பல இன சமுதாயம் என்பதை நாம் மேலும் வலியுறுத்துவது அவ சியம்,” என்றார் ‘வீ கிம் வீ’ தொடர்பு, தகவல் பள்ளியில் படிக் கும் செஜால்.
“சமூக அமைப்புகளின் பங்கு குறித்து கேள்வி கேட்டிருந்தேன். சமூக நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் அரசாங்கம் மேலும் பல உதவிகள் புரியலாம். பொதுவான சலுகைகளும் பற்றுச் சீட்டுகளும் வழங்குவது மட்டும் போதாது. பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவ முன்வருபவர் களுக்குக் கூடுதல் உதவிகள் வழங்கப்படுவது அவசியம்,” என்றார் திரு ‌ஷுகுல் ராஜ் குமார், 22. 
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த இக்கலந்துரை யாடலில், சிங்கப்பூரர்களிடம் கலா சார நல்லிணக்கத்துடன் திறந்த மனப்பான்மையும் திறன் மேம்பாட் டில் விருப்பமும் இருக்கவேண்டும் என்று அமைச்சர் ஹெங், வலி யுறுத்திக் கூறினார். 
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மக்கள்தொகை தொடர்பில் 2013ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. 
அதன்படி 2030ஆம் ஆண்டுக் குள் நாட்டின் மக்கள்தொகை 6.9 மில்லியனை எட்டும் என்பதன் தொடர்பில் கேட்கப்பட்ட கேள் விக்கு நிதி அமைச்சர் ஹெங் பதிலளித்தார். 
இது உணர்வுபூர்வமாக ஏற் றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் நடைமுறைப்படி பார்த்தால் குறைந்துக்கொண்டு வரும் தொழிலாளர்கள் எண்ணிக் கையால் வெளிநாட்டிலிருந்து ஊழியர்களை வரவேற்பது அவசிய மாகிறது என்றார் அமைச்சர். 
“மக்கள் தங்களைச் சுற்றி சுவர் எழுப்பிக்கொண்டு தனித்து இயங்கும் உலகம் நமக்கு வேண்டாம்,” என்ற கோரிக்கையை அரங்கத்தில் கூடி இருந்த இளையர்களிடம் முன்வைத்தார் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்.
நிதி அமைச்சருடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல் இளையர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்த துடன் கருத்துகளைத் தெரிவிக்க இது ஒரு சிறந்த தளமாகவும் விளங்கியது. 
2019-04-08 06:00:00 +0800