மாணவர் படைப்பில் கவிதை குறும்படம்

தாம் சண்முகம்

எது இலக்கியம், எது இலக்கியம் இல்லை, இலக்கியத்தை இளையர்களிடத்தில் எடுத்துச் செல்ல குறும்படங்கள் உதவி செய்யுமா, போன்ற கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் அமைந்த கலந்துரையாடல், ‘திரைக்கவி 2019’ நிகழ்வின் ஓர் அங்கமாக நடந்தேறியது.
குறும்படம் வழி தமிழ் இலக் கியத்தை இளையர்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியை மையமாக வைத்து நடைபெற்றது இவ்வாண்டின் ‘திரைக்கவி’.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி சென்ற மாதம் 30ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் நடந்தது.
குறும்படங்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும் என்பதால் புது உத்தியாக கைபேசியில் நான்கு சுவர்களுக்குள் பத்து நிமிட குறும்படம் எடுப்பது எப்படி என்பதைக் கற்பிக்கும் ‘திரையறை’ என்ற பட்டறை முன் னதாக ஏற்பாடு செய்யப்பட்டதாக மன்றத்தின் தலைவர் திரு சுப்பு அடைக்கலவன் தனது வரவேற் புரையில் கூறினார். 
‘பிளாக்ஸ்பைஸ் மீடியா’வின் ஆக்கபூர்வ இயக்குநர் திரு சலீம் ஹாடி, நடத்திய இப்பட்டறையால் பயனடைந்தவர்கள் தயாரித்த குறும்படங்கள் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டன. 
உள்ளூர் எழுத்தாளர் களின் கவிதைகளைக் கருவாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்தக் குறும் படங்கள் நிகழ்ச்சியில் திரை யிடப்பட்டன.
குறும்படத்  திரையிட லுக்கு வலுசேர்க்கும் வகையில் இயக்குநர் குழுக்களுடன் பார்வை யாளர்களின் கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது. 
அந்தக் குறும் படங்களின் கதை, இயக்கம், தயாரிப்பு குறித்த பார்வையாளர் களின் கேள்வி களுக்குக் குழுவினர் பதில் அளித்தனர்.
நிகழ்ச்சியில் இரண்டா வது அங்கமாக ‘குறும்படங்கள் இளையர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கின்றன’ என்ற தலைப்பில் கலந்து ரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. 
இதில் தமிழ்க் கல்வி, ஊடகம், நாடகம், குறும்பட நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைப் பார்வையாளர் களுடன் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகிய கல்வி நிலையங்களி லிருந்து வந்த இளையர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள்  கலந்துகொண்டனர்.
ஒரு குறும்படத்தை நான்கு சுவர்களுக்குள் எளிதாகக் கைபேசியிலேயே படமாக்க முடியும் என்பதை கற்றுக்கொண்ட தாகவும் ஒரு கவிதையை கருப்பொருளாகக் கொண்டு குறும்படம்  எடுக்கமுடியும் என்பதை அறிந்துகொண்ட தாகவும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியான வஹீடா ஜபீன் தெரிவித்தார். 
குறும்படத்தை மையமாகக் கொண்டு தமிழ்மொழியை வளர்ப்பது சிறந்த முயற்சி. 
இவ்வாறு காலத்திற்கேற்ப தமிழ்மொழியை வளர்க்கும் உத்தியைக் கையாள்வது எப்படி என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.
அத்துடன் தமிழ்க் குறும் படங்கள் தயாரிக்க இளைஞர் களுக்கு மேலும் அதிக ஆதரவு வழங்கப்பட்டால் சிறப்பாக இருக் கும் என நிகழ்ச்சிக்கு வருகை தந்த பார்வையாளர்களில் ஒருவரான 57 வயது திருமதி சீனிவாசன் விஜயலட்சுமி கூறினார்.