வாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்

சூடான வாதங்களைத் திறம்பட முன்வைத்து மேடையை அதிர வைத்தனர் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவர்கள். இவர்களின் திறமைக்கு ஒரு களமாக அமைந் தது 'சொற்சிலம்பம்'. தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இவ்விவாதப் போட்டி இவ் வாண்டு ஏப்ரல் ஆறாம் தேதியன்று நடந்தேறியது.

'நம் மெர்டேக்கா (முன்னோடி) தலைமுறையினரைப் போலன்றி இன்றைய இளைய தலைமுறை யினர் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையற்றவர்களாக உள்ளனர்' என்ற தலைப்பில் விவாதித்துச் சொற்சிலம்பம் 2019 போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றில் வென் றனர் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி அணி. அணியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி ஜோன் கிளமன்ட் மெலின்டா ஜோ ஷல், கருத்து களைத் தெள்ளுதமிழில் அழகுறப் பேசி சிறந்த பேச்சாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

தயாரித்துப் பேசும் சுற்று, தயாரிப்பின்றிப் பேசும் சுற்று ஆகிய இரண்டிலுமே ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரிக்கு ஈடுகொடுத்து விவாதித்துப் போட் டியைச் சூடு பிடிக்க வைத்தனர் நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி அணி. இவர்கள் இளம் பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழக மாணவிகள்.

தொடக்கக்கல்லூரிகள், பல துறைத் தொழிற்கல்லூரிகள், மத் தியக் கல்விக் கழகங்கள், ஐபி திட்டக் கழகங்கள் ஆகியவற்றுக் காக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஒரு பலதுறை தொழிற்கல்லூரி மாபெரும் இறுதிச் சுற்றுக்கு முன் னேறியது இதுவே முதல்முறை. தலைப்பை ஒட்டிப் பேசிய நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள், முன்னோடி தலைமுறையினர் அனுபவித்த இன்னல்கள், கடந்து வந்த போராட்டங்களோடு இன்றைய இளைய தலைமுறையினரின் மனப் பான்மையை ஒப்பிட்டுப் பேசினர்.

சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலையில் முன்னோடி தலைமுறையினர் வேலை இல் லாமல் வாழ்வாதாரம் இல்லாமல் இருள் சூழ்ந்த எதிர்காலத்தைத் தங்கள் கடின உழைப்பு, தன் னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் வென்று காட்டினார்கள் என்ற கருத்தினை முன்வைத்து அவர் கள் சிறப்பாக விவாதித்தனர். அதற்குப் பதிலடி கொடுத்த ஆண்டர்சன் சிராங்கூன் தொடக் கக்கல்லூரி மாணவர்கள், இன் றைய போட்டித்தன்மைமிக்க கடுமையான கல்விமுறையில் பயின்று, உள்ளிருந்தும் வெளி யிலிருந்தும் தாக்கங்கள் மிக அதிகமாக இருந்தாலும் இவற்றை எல்லாம் கடந்து வந்து கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் இளைஞர்கள் மிகவும் வலிமை மிக்கவர்கள் என்ற கருத்தினை ஒட்டி விவாதித்தனர்.

இப்படி தங்களின் கருத்து களைக் காரசாரமாகப் பேசிய இரு குழுக்களும் தயாரிப்பின்றிப் பேசும் சுற்றிலும் வெளுத்து வாங்கின. 'சிங்கப்பூர் அடையாளத்தை வளர்க்க சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் உதவுகின்றன' என்ற தலைப்பை ஒட்டி அவர்கள் திறமை யாக விவாதித்தனர்.

காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்று ஆகியவற்றைக் கடந்து மாபெரும் இறுதிச் சுற்றுக்கு முன் னேறியதில் பெருமிதம் கொள் வதாக நீ ஆன் பலதுறைத் தொழிற்நுட்பக் கல்லூரி மாணவி ஹர் ‌ஷினி கணபதி கூறினார். "விவாதத்திற்கு ஆதாரமாகத் தேவைப்பட்ட புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, எதிர் தரப்பினரைப் புண்படுத்தா வண்ணம் வாதங் களை முன்வைப்பது, நகைச்சுவை உணர்வோடு வாதிடுவது ஆகிய வற்றை இப்போட்டியின் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டோம்," என்று 19 வயது ஹர் ‌ஷினி பகிர்ந்து கூறினார்.

அதே குழுவில் பேசிய மற்றொரு பேச்சாளரான திவ்யாஸ்ரீ இராஜேந்திரன், முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்றில் வாதிடுவதற்கு அச்சமாக இருந் தாலும் மன தைரியத்துடனும் கவனம் சிதறாமல் விவாதித்ததால் இப்போட்டியை எளிதாகக் கையாள முடிந்ததாக குறிப்பிட்டார். அதிக நேரம் மூச்சுவிடாமல் தொடர்ந்து தமது கருத்துகளைத் தெரிவித்ததன் மூலம் பார்வை யாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த் திய மெலின்டா, சிறந்த பேச்சாள ராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் தான் பெருமை கொண்டதாக சொன்னார். "எங்களின் வகுப்புகள் வேறு வேறு நேரத்தில் முடியும் பட்சத்தில் சகிப்புத்தன்மையுடன் ஒருவருக் கொருவர் காத்திருந்து ஒரு குழு வாக சேர்ந்து இப்போட்டிக்காக எங்களைத் தயார் செய்துகொண் டோம்.

"ஆசிரியர்கள் திரு கணேசன், திருவாட்டி வாணி ஆகியோர் எங் களது வெற்றிக்கான தூண்கள் என்றே கூறவேண்டும். இப்போட்டி யின் மூலம் உலக நிலவரங்களைப் பற்றிய செய்திகளை நான் தெரிந்து கொண்டேன்," என்று கூறிய மெலின்டா, தமது குழுவின் விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே வெற்றிக்கான முக்கிய காரணங் கள் என்றார். 13ஆவது முறையாக இவ் வாண்டு நடத்தப்பட்ட விவாதப் போட்டியில் 10 உயர்கல்வி நிலை யங்கள் பங்கெடுத்தன. மக்கள் கழக நற்பணி பேரவை, வடமேற்கு வட்டார இந்தியர் நற்பணி செயற்குழுக்கள், வசந்தம் ஒளிவழி ஆகியன விவாதப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தன. மீடியாகார்ப் வளாகத்தில் நடை பெற்ற இந்த இறுதிச் சுற்றில் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் கலந்துகொண்டு வெற்றியாளர் களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!