தமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்

வசனம் பேசி நடிப்பது, தைரியமாக கூட்டத்தின் முன்னால் நின்று பேசுவது, கொடுத்த தலைப்பை ஒட்டி உடனே கட்டுரை எழுதுவது, தமிழ்மொழி, பொது அறிவு ஆகியவற்றைச் சோதிக்கும் புதிர் போட்டியைக் கொடுத்த நேரத்திற் குள் முடிப்பது போன்ற சவால் களைக் கடந்து வந்து தமிழ்மொழி, கலாசாரம் மீதான ஆர்வத்தைத் தூண்டும் போட்டிகளில் பங்கெடுத் துப் பயன்பெற்றனர் மாணவர்கள்.

கிட்டத்தட்ட 42 உயர்நிலைப் பள்ளிகளையும் தொடக்கக் கல் லூரிகளையும் சேர்ந்த மாணவர் கள், தமிழ்மொழி விழாவையொட்டி ராஃபிள்ஸ் கல்வி நிலையம் ஏற் பாடு செய்திருந்த தமிழ் இலக்கியப் போட்டிகளில் பங்கேற்றனர்.

கல்வி நிலைய இந்தியக் கலா சார மன்ற மாணவர்கள் போட்டி களை வழிநடத்த, கல்வி அமைச் சின் தமிழ்மொழி கற்றல், வளர்ச் சிக் குழு ஆதரவு வழங்கியது. மூவர் அடங்கிய குழுவாக ஒரு மணி நேரத்திற்குள் தெரிவு வினா விடைகள், குறுக்கெழுத்துப் போட்டி போன்ற புதிர் அங்கங்கள் மாணவர்களிடையே உற்சாகத் தைக் கிளப்பின. "முன்னோர்களின் வரலாறு, ஐம்பெரும் காப்பியங்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த கேள்வி களுக்குக் குறுகிய நேரத்திற்குள் பதிலளிப்பதற்குச் சவாலாக இருந் தாலும் சிந்தித்து ஒரு குழுவாக செயல் பட்டுக் கேள்விகளை ஆராய்ந்த முயற்சியே சுவாரசிய மாக அமைந்தது," என்றார் புதிர்ப் போட்டியில் கலந்துகொண்ட சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவி சாமிநாதன் ரிதர்நிகா.

மாணவர்கள் நாடகப் போட்டி யில் நால்வர் கொண்ட குழுக் களாகத் தமிழ் இலக்கியப் படைப்பு களை மேடையேற்றினர். "விக்ர மாதித்தனும் வேதாளமும் என்ற கதையை மையமாகக் கொண்டு நாடகப் போட்டியில் இப்படைப்பை மேடையேற்றினோம். போட்டியில் சேர முதலில் தயக்கம் இருந்தாலும் ஒரு மாதம் இதற்காக ஒத்திகை பார்த்து வெற்றிகரமாக மேடையேற்றி யதில் எங்கள் குழுவினரிடையே தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது," என்று கூறினார் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியின் உயர்நிலை இரண்டில் பயிலும் மாணவி கோபிகிருஷ்ணன் ஷ்ரேயா. நாடகப்போட்டி பிரிவில் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி மூன் றாம் பரிசைத் தட்டிச் சென்றது. தலைமைத்துவ பண்புகளை வளர்க்க உதவியதோடு நண்பர் களின் ஒத்துழைப்பில் இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்று தெரிவித்தார் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் இந்திய கலாசார மன்றத் தலைவர் சோலைமுத்து கிருத்திக்.

ராஃபிள்ஸ் இந்திய கலாசார மன்ற 32வது தமிழ் இலக்கியப் போட்டிகளின் மாபெரும் சவால் கிண்ணத்தை என்யுஎஸ் உயர் நிலைப்பள்ளியும் செயிண்ட் மார்கிரட்ஸ் பள்ளியும் கைப்பற்றின. கடந்த 5ஆம் தேதியன்று நடந்த இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா வில் ராஃபிள்ஸ் கல்வி நிலையத் தின் முன்னாள் மாணவரும் தற் போதைய இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதி காரியுமான திரு த.ராஜசேகர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்மொழி, பொது அறிவு தொடர்பான புதிர்க் கேள்விகளுக்கு மாணவர்கள் குழுக்களாக பதிலளித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!