தமிழ்ச் செயலி உருவாக்கத்தில் வீரர்களாக மாறிய இளையர்கள்

முதியோருக்கான பெரிய எழுத் துரு கொண்ட சுகாதாரப் பராமரிப் புச் செயலி, மாணவர்களுக்கான பாடத்திட்டச் செயலி, பொழுது போக்குக்குப் பயன்படும் செயலி, தமிழ் இலக்கணம், கலாசாரம், செய்யுட்கள் கொண்டமைந்த செயலி என புத்தாக்கச் சிந்தனை களையும் தொழில்நுட்பத் திறன் களையும் ஒருங்கே சங்கமிக்க வைத்தனர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.

தமிழ்மொழியில் திறன்பேசி செயலியை உருவாக்கும் முயற் சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். 

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு ஏற்பாடு செய்திருந்த ‘செயலி(யி)ல் வீரரடி’ நிகழ்ச்சியில் மாணவர்கள் தயாரித்த செயலிகள் சில படைக்கப்பட்டன. 

உயர்நிலை ஒன்று, இரண்டு மாணவர்களுக்கும் உயர்நிலை மூன்று, நான்கு மாணவர்களுக்கும் தனித்தனிப் போட்டிகள் நடத்தப் பட்டன. 

மூவர் கொண்ட குழுக்களாக இயங்கிய மாணவர்களுக்குத் தொழில்நுட்ப நிபுணர்கள் செயலி தயாரிக்கும் உத்திகளைக் கற்றுக் கொடுத்தனர்.

“சில மாதங்களுக்கு முன்னரே மாணவர்களைத் தயார்படுத்தி னோம். அவர்களுக்குப் பட்டறை கள் நடத்தப்பட்டு மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட நேரத்தில் செயலி உருவாக்கத்தில் ஈடுபட் டனர். மொத்தம் 115 குழுக்கள் பங்கெடுத்தன. அவற்றில் 67 குழுக்கள் தங்களின் செயலி களைச் சமர்ப்பித்தன,” என்றார் அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவின் தலைவர் திரு அ கி வரதராஜன்.

“நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும் கணினி வல்லுநர் களும் மாணவர்களுக்குத் தக்க பயிற்சிகளை வழங்கினர். 

எந்த மென்பொருளைப் பயன் படுத்துவது, எவ்வாறு தங்களின் சிந்தனைகளைச் செயலாக்கம் பெற வைப்பது போன்றவற்றுக்கு அந்த வல்லுநர்கள் பெருமளவில் உதவினர்,” என்றும் அவர் தெரி வித்தார்.  

மாணவர்கள் தயாரித்த செயலி களைத் தரவரிசைப்படுத்தி இரு பிரிவுகளிலும் தலா மூன்று குழுக் கள் இம்மாதம் 21ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது தாங்கள் உருவாக்கிய செயலி களைப் பற்றி விளக்கமளித்தனர். 

நடுவர் குழுவில் உள்ளவர்கள் அந்தச் செயலிகள் தொடர்பான கேள்விகளைக் கேட்டு தங்கள் கருத்துகளையும் கூறினர். அத் துடன் மாணவர்களிடம் விளக்கங் களையும் கேட்டறிந்தனர். 

தமிழ்மொழியை வளர்ப்பது ஒரு நோக்கம் என்றாலும் தொழில் நுட்பத்தில் தமிழ்மொழியை இணைத்து அதை எவ்வாறு மாண வர்கள் ஆர்வத்துடன் அரவணைக் கின்றனர் என்பது மேலும் வர வேற்கத்தக்க ஒன்று என்றார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு ராம் சுப்பையா. 

“தாங்கள் தயாரித்த செயலியை இயக்கிக் காண்பித்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் என்னெவென்று மாணவர்கள் விளக்கியதும் முக்கியமான கற்றல் அம்சங்கள். பார்வையாளர்களான எங்களுக்கும் அதிலிருந்து பலவற் றைக் கற்றுக்கொள்ள முடிந்தது,” என்றார் திருவாட்டி ஃபௌசியா. 

உயர்நிலை 1, 2 மாணவர்கள் பிரிவில் முதல் பரிசை குவோ சுவான் பிரஸ்ப்டேரியன் பள்ளி யைச் சேர்ந்த ‘வந்தியத்தேவன்’ எனும் குழு தட்டிச்சென்றது. 

இரண்டாவது நிலையில் ஆங்கிலோ சீனப் பள்ளியும் மூன் றாவது நிலையில் சிஹெச்ஐஜே உயர்நிலைப் பள்ளியும் வந்தன. 

உயர்நிலை 3, 4 மாணவர்கள் பிரிவில் ராஃபிள்ஸ் கல்விக் கழகம் வாகை சூடியது. 

இரண்டாவது பரிசை ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளியின் ‘இணையத்தால் இணைவோம்’ அணியும் மூன்றாவது பரிசை மார்சிலிங் உயர்நிலைப் பள்ளியின் ‘முதியோர் முத்துகள்’ அணியும் தட்டிச்சென்றன.  

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றியாளர் களுக்குப் பரிசுகளை வழங்கினார் பேராசி ரியர் திரு அ வீரமணி.

அவர் ஆற்றிய சிறப்புரையில், “நமது பொருளியலும் எதிர்கால மும் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே தான் இருக்கும். வேலைவாய்ப்பு களும் மாற்றம் கண்டு வரு கின்றன. 

“முன்பு நிரந்தர வேலைகள், தற்போது ஒப்பந்த வேலைகள், இனி ‘ஃபிரீலான்ஸ்’ எனப்படும் குறுகிய கால அடிப்படையிலான பொருளியலாக இருக்கப் போகி றது,” என்றார். 

“வளர்ந்த நாடுகளில் பரவி வரும் இந்த ‘ஃபிரீலான்ஸ்’ பொரு ளியல் சிங்கப்பூரிலும் அறிமுகம் கண்டு வருகிறது. அந்த வகைப் பொருளியலில் பலர் பல வேலை களையும் செய்து வருகின்றனர். 

“அதனால் படிக்கும் காலத்திலேயே நாம் என்ன செய்தால் வாழ்நாள் முழுதும் வருவாய் ஈட்டலாம் என்பதை ஆராயவேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார். 

தொழில்நுட்பத்தைக் கொண்டு மாணவர்கள் உருவாக்கிய செயலிகள் பொருளாதார சிறப் பான எதிர்காலத்தைக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

 

Loading...
Load next