கவிதைக்கு புகைப்படங்கள்வழி உருவம் தந்த மாணவர்கள் 

வாசகர் வட்டம் அமைப்பின் ஒருங் கிணைப்பில் 'கவிதையும் காட்சியும்' என்ற நிகழ்ச்சி தமிழ்மொழி விழா வின் ஓர் அங்கமாக இம்மாதம் 19ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடைபெற் றது. 

உள்ளூர்க் கவிதைகளுக்கேற்ப புகைப்படங்களைப் பதிவுசெய்யும் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஏற்கெனவே மார்ச் மாதம் நடத்தப்பட்ட பயிலரங் கில் போட்டிக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

உயர்நிலைப் பள்ளி மாணவர் களுக்கான இந்தப் போட்டியில் மொத்தம் 45 மாணவர்கள் பங் கேற்று 160 புகைப்படங்களைப் பதிவு செய்திருந்தனர்.

அவர்கள் கிட்டத்தட்ட 25 உள்ளூர்க் கவிதைகளுக்குப் புகைப் படங்களைப் பதிவுசெய்திருந் தனர். 11 மாணவர்களுக்குப் பரிசு கள் வழங்கப்பட்டன.

முதல் பரிசை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பயிலும் மாணவி செந்தில் ஸ்ரேயா பெற் றார். இவர் ஷா நவாஸின் ‘ஞாபகம் இருந்த நாட்கள்’ என்ற கவிதைக் கேற்ற படத்தை எடுத்திருந்தார். இரண்டாம் பரிசு பாலு மணிமாற னின் ‘சாசனம்’ என்ற கவிதைக் கேற்ற புகைப்படத்தை எடுத்த ஆங்கிலோ சீன பள்ளி மாணவர் மணி செந்தில்நாதன் விக்னேஷ் பெற்றார். நெப்போலியன் எழுதிய ‘கான்கீர்ட் காடுகள்’ கவிதைக் கேற்ற புகைப்படத்தை எடுத்த தஞ்சோங் காத்தோங் பள்ளியின் மாணவி மணிகண்டன் சுவேதா மூன்றாம் பரிசைப் பெற்றார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான செம்பவாங் குழுத் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் சான்றிதழ்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளரும் நடிகரும் இயக்குநருமான திருவாட்டி ரோகிணி, ஓரங்க நாடகப் பாணி யில் அமைந்த கவிதை வாசிப்பை நிகழ்த்தினார். 

சமகாலக் கவிதைகளையும் பாஞ்சாலி சபதத்தின் சில காட்சி களையும் இணைத்து உருவாக் கப்பட்டிருந்த இப்பகுதி, பெண் ணியச் சிந்தனைகளை வலியுறுத்து வதாக அமைந்திருந்தது. நிகழ்ச் சிக்குத் தலைமையேற்ற 'தி மீடியா' நிறு வனத்தின் நிர்வாகி திரு முகம்மது அலி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு களை வழங்கி உரையாற்றினார். 

நண்பர் ஒருவரின் கவிதை வரியே தான் ஊடகத்துறையில் நுழையக் காரணமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், நகர வாழ்வின் உரத்த சந்தடிகளில் மறைந்து போகும் பலவற்றில் ஒன்றாகக் கவிதையும் ஆகிவிடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

செய்தி: வாசகர் வட்டம் 

 

Loading...
Load next