தேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம் 

தமிழ்க் கவிதைகளை மற்ற மொழிகளிலும் மற்ற மொழிக் கவிதைகளைத் தமிழிலும் அறி முகப்படுத்தும் நோக்கில் நடத் தப்பட்டது இவ்வாண்டின் ‘சிங்பொரிமோ’ கவிதை சங்கமம் நிகழ்ச்சி.

சிங்கப்பூரில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட கவிதைகளுடன் மற்ற மொழிகளில், மற்ற சூழல் களில் எழுதப்படும் கவிதை களையும் அவற்றின் தன்மையைப் பற்றிய சுவாரஸ்யமான கலந் துரையாடல், நிகழ்ச்சியின் முதல் அங்கமாக அமைந்தது. 

இந்தக் கலந்துரையாடலில் பல மொழி கவிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ்க் கவிஞர்கள் அருண் வாசுதேவ் கிருஷ்ணன் மற்றும் அழகப்பன் மெய்யப்ப னுடன் தாய்லாந்து கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியம் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ்.செல்வா கலந்துரையாட லில் தங்கள் அடையாளங்கள் பற்றியும் மொழி மீதான தொடர் பைப் பற்றியும் பகிர்ந்துகொண் டனர். 

இந்தக் கலந்துரையாடலை இளம் எழுத்தாளர் வட்டத்தின் தலைவர் ஹரிணி வி.  வழிநடத்தி னார். 

அதைத்தொடர்ந்து இளம் கவிஞர்கள் தங்களின் கவிதை கள் பற்றியும் அவற்றை எழுதத் தேவைப்படும் தூண்டுதல் பற்றி யும் பகிர்ந்துகொண்டனர். 

பிரியா ரவி, மா பிரெமிக்கா, சுபா‌ஷினி கலைக்கண்ணன், 

சு லோகராஜ் ஆகியோர் இசைக் கேற்ப தங்கள் கவிதைகளைப் படைத்தனர்.

நிகழ்ச்சியில் பானுபிரியா பொன்னரசு அபிநயம் பிடித்துக் கவிதைக்கு அழகு சேர்த்தார். 

தேசிய நூலகத் தமிழ்ப் பிரிவின் இளம் எழுத்தாளர் வட்டம் ஏற்பாட்டில், ‘கேளீர்’, ‘வளர்தமிழ் இயக்கம்’ ஆகிய இரு அமைப்புகளின் ஆதரவில் இம்மாதம் 18ஆம் தேதி ‘சிங்பொரிமோ’ கவிதை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

Loading...
Load next