ஆட்டத்தை முடித்துள்ள ‘அவெஞ்சர்ஸ்’ 

அண்மையில் உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்கள், குறிப் பாக அவெஞ்சர்ஸ் திரைப்படத் தொடர் ரசிகர்கள் அதீத ஆர்வத் துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்'. இது கடந்த 2017ஆம் ஆண்டில் வெளி வந்த ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.

சிங்கப்பூரிலும் இந்தத் திரைப் படம் வசூலில் சாதனை படைத் துள்ளது. முதல் ஐந்து நாட்களில் $7.52 மில்லியனை அது வசூலித் தது. இந்தத் திரைப்படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்

ளது. அத்துடன் உலகின் பல நாடுகளில், பல மொழிகளில் இத் திரைப்படம் வெளியிடப்பட்டுள் ளது.

இந்தியாவில், ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி யானது. அவற்றுக்கு இந்திய ரசி கர்களுக்கு ஏற்றவாறு ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ஒரு பாடலை இயற்றியுள் ளார். தமிழ்ப் பாடலுக்கு ஏ ஆர் முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார். தமிழ்த் திரையுலக நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெர மையா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களுக்குக் குரல் கொடுத் துள்ளனர்.

அவெஞ்சர்ஸ் என்பது காமிக்ஸ் கேலிச்சித்திரங்களை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட திரைப் படம். அவெஞ்சர்ஸ் என்பது ‘அயன்மேன்’, ‘தோர்’, ‘ஹல்க்’, ‘ஸ்பைடர்மேன்’ போன்ற பூமியில் வாழும் பல சூப்பர் ஹீரோக்களை மையமாகக் கொண்ட கதை.

இவர்களுக்கு எதிராக சூப்பர் வில்லன் கதாபாத்திரத்தில் வரு கிறான் 'தானோஸ்' எனும் வேற்று கிரக வில்லன். 

தானோஸ் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள மக்களால் பல தொல்லைகள் நேர்ந்துவிட்டது என்ற கோபத்தில் மீண்டும் உலகைச் சமநிலைக்குக் கொண்டு வர பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களில் பாதியை அழிக் கத் திட்டமிடுகிறான்.

‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படத்தில் தானோஸ் சக்திவாய்ந்த அனைத்து நவரத் தின கற்களையும் கைப்பற்றி, தன் னுடைய சக்தியைப் பயன்படுத்திப் பிரபஞ்சத்தில் உள்ள பாதி உயிர்களை மாய்த்துவிடுகிறான்.  மக்களோடு அவெஞ்சர்ஸ் குடும் பங்களைச் சேர்ந்த உறுப்பினர் களையும் அழித்து விடுகின்றான். இதன் தொடர்ச்சியாக இப்படம் ஆரம்பிக்கிறது. 

இத்தகைய பிரம்மாண்டமான திரைப்படம் இன்னும் அரங்குகளில் திரையிடப்பட்டு வருவதால், மொத்த வசூல் தொகை மேன் மேலும் பன்மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகல் தகவல்களை அழிக்கும் தானோஸ் கையுறை 

கூகல் இணையத்தளத்தில் 'தானோஸ்' என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடினால் தானோஸ் அணியும் உலோகக் கையுறையைக் காணலாம். அதை 'கிளிக்' செய்வோரின் கணினித் திரையில் காணப்படும் கூகல் தகவல்கள் ஒவ்வொன்றாக மறை யும் விசித்திரம் நடந்து வருகிறது.

தானோஸ் தன்னுடைய இடது கையில் ஐந்து நவரத்தினக் கற் களைக் கொண்ட உலோக கையுறையை அணிந்திருப்பான். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தின் இறுதியில் தானோஸ் அக்கையுறையை அணிந்தவாறு சொடுக்கு போடும் போது பிரபஞ்சத்தில் உள்ள பாதி உயிர்கள் சாம்பல் போல காற்றில் பறந்து மறைந்துவிடும்.

அதேபோல தற்போது கூகலில் தானோஸின் கையுறை கொண்ட படத்தை 'கிளிக்' செய்தால் கூகல் தகவல்கள் மறைந்துவிடுகின்றன. நீங்களும் செய்து பாருங்களேன்! 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி

20 May 2019

சிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள் 

தேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். 

(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 May 2019

சாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்