நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் முளைகட்டிய வெந்தயம்

முளைகட்டிய வெந்தயத்தை பல தலைமுறை களாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த வெந்தயத்தால் கிடைக் கக்கூடிய பயன்களைப் பார்ப்போம்.

முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படி யான வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ் நிறைந்துள்ளன.

பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப் பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதேவேளையில் கர்ப்பிணி கள் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோய்க்கும் இது நல்லது. சருமம், கல்லீரல், சிறுநீரகம், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செரிமானம் துரிதமாக நடைபெறவும் வழிவகை செய்யும். காய்ச்சலையும் குணப்படுத்தும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு முளைகட்டிய வெந்தயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் மூலக் கூறுகள் உடலில் இன்சுலின் சுரப்பை அதி கரிக்கும். அத்துடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாமலும் பார்த்துக்கொள்ளும்.

குறிப்பாக ‘டைப் 2’ வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிட்டுவர ரத்த சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பைத் துரிதப்படுத்துகிறது.

முளைகட்டிய வெந்தயத்தில் பாலிசாக்க ராய்ட் (polysaccharide) அதிகம் உள்ளது. இது நிறைவாகச் சாப்பிட்ட உணர்வைத் தரு கிறது. இதனால் அதிக உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும். அதோடு முளை கட்டிய வெந் தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்து களும் இருக்கின்றன.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப் பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச் சினைகளையும் தவிர்த்திடலாம். உடலில் கொலஸ்ட் ரால் சேராமலும் பாதுகாக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!