உடற்பயிற்சி மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம்

இதயம் தொடர்பான நோய்கள் உலகமெங்கும் 17 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக உள்ளன. அதில் பாதியளவு மர ணங்கள் ஆசியாவில் நிகழ்கின் றன.

சிங்கப்பூரில் மூன்று மரணங் களில் ஒன்று இதய நோய்கள் அல்லது பக்கவாதத்தால் நிகழ்கின் றது. சிங்கப்பூரின் மக்கள் தொகை மூப்படையும்போது, இன்னும் அதிகமான மக்கள் இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.

முதிய வயதில் நோய்கள் எளிதில் பீடிக்கும் என்பதும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங் களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அபாயக்கூறுகள்.

‘தில் ஹெல்தி ஹார்ட்ஸ்’ எனும் ‘ஹெல்தி ஏ‌ஷியா ஆசிய பசிபிக்’ அறிக்கையில் தீராத நோய்கள் வந்தவுடன் அவற்றைக் குணமாக்கும் முயற்சிகளில் ஈடு படுவதைக் காட்டிலும் அவை வரு வதற்கு முன் நோய் தவிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதன் பலன் மிக அதிகம் என்பதை வலியுறுத்தியது.

நோய்கள் வராமல் தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம் என்பதை பலர் அறிந்தி ருந்தாலும் அவ்வாறு செய்வதால் மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களைத் தடுக்க முடியும் என்று அறிந்திருக்கவில்லை.

“நோய் தவிர்ப்பு நடவடிக்கை என்பது புதிதல்ல. இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை யைத் தேர்ந்தெடுத்து செயல்படு வதற்கு பலர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை,” என்றார் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையின் இதயப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் டான் ஹுவே சீம்.

“சிங்கப்பூரில் மூன்றில் ஒருவ ருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் வாழ்நாள் அபாயம் உள்ளது. ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

“உயர் ரத்த அழுத்தம் உள்ள வர்களில் பாதி பேர் தங்கள் ரத்த அழுத்தத்தைப் பாதுகாப்பான அளவுக்குக் கொண்டு வரு வதில் அக்கறை காட்டுவதில்லை,” என்றார் பேராசிரியர் டான்.

‘தில் ஹெல்தி ஹார்ட்ஸ்’ அறிக்கையில் சுகாதாரம் தொடர் பான கல்வியை, பொதுமக்கள் மட்டுமல்லாமல், மருத்துவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பெற வேண்டும் என்று குறிப்பிடப்­பட்டுள்ளது என்றும் பேராசிரியர் டான் கூறினார்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தால் நோய்கள் வராமல் தவிர்க்கலாம் என்பது மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!