ராசிபலன்

கும்பம்

இன்றைய பலன்:

கும்பம் பல நாளாகத் திட்டமிருந்த வெளி வேலைகள் இன்று நல்லபடியாக நடந்தேறும். அந்த வகையில் ஆதாயங்கள் கிடைத்திடும். குடும்ப நலன் தொடர்பில் கணிசமான தொகை செலவாகும். உழைப்புக்குரிய ஓய்வு எடுப்பது முக்கியம்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

நிறம்: அரக்கு, மஞ்சள்

வார பலன் : 15-08-2021 முதல் 21-08-2021 வரை

அன்புள்ள கும்ப ராசிக்காரர்களே,

ஜென்ம ராசிக்கு 10ஆம் இடத்தில் உலவும் சந்திரன் அருள்பார்வை வீசுவார். 8ஆம் இட சுக்கிரன் நற்பலன்களைத் தருவார். புதன், செவ்வாய், சூரியனுக்கு 7ஆம் இடம் சாதகமாக அமையாது. ஜென்ம குரு, 4ஆம் இட ராகு, 10ஆம் இட கேது, 12ஆம் இட சனியின் பலம் கெடும்.

அனைவரிடமும் பணிவாக நடந்துகொள்பவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். கிரக அமைப்பைப் பார்த்தபின் இது கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் என உணர்ந்திருப்பீர்கள். கவலை வேண்டாம். குருவின் புண்ணியப் பார்வைகளும் தெய்வ அருளும் உங்களுக்குத் துணை நிற்கும். இவ்வாரம் சூழ்நிலை முற்றிலும் உங்கள் பக்கம் சாதகமாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. நீங்கள் ஒன்று திட்டமிட, நடப்பதோ வேறு ஒன்றாக இருக்கும். என்னதான் சரியாகத் திட்டமிட்டாலும் குறிப்பிட்ட பணிகள் சட்டென முடியாமல் இழுபறியாக இருக்கும். ‘என்னடா வாழ்க்கை’ என்ற அலுப்பு தோன்றும். இச்சமயம் உங்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களிடம் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெறலாம். அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய வரவுகள் ஒரே சீராக இருக்காது. எனவே செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது மிகவும் முக்கியம். மேலும் பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கும். எனினும் பணிச்சுமை, வீண் அலைச்சல் காரணமாக சில சமயம் சோர்வு தட்டும். பணப் புழக்கம் உள்ள இடத்தில் பணிபுரிவோர் இரட்டிப்பு கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்காது. வார இறுதியில் புது தொடர்புகள் கிட்டும். அவை பயனுள்ளதாக அமையும்.

குடும்ப நலன் தொடர்பில் கணிசமான தொகை செலவாகும். உடன்பிறந்தோர் ஆதரவுண்டு.

அனுகூலமான நாட்கள்: ஆகஸ்ட் 20, 21.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.